பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் - 97 கிரிகரி என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிருறுன் என்று யூகிக்க முயற்சித்தவாறே அவள் வெகு நேரம் மேஜை முன் உட்கார்ந்திருந்தாள். சுத்தம் செய்யப்பட்ட பாத்தி ரங்கள் அவளுக்கு முன்னுல் இருந்தன. அவர்கள் அறை யின் ஜன்னலுக்கு எதிரில் வெள்ளைச் சுவர் மீது அஸ்தமன குரியனின் செவ்வொளி சிறிது படிந்திருந்தது. சுவர் அவ் ஒளியை மடக்கித் திரு ப் பி அறையினுள் எறிந்தது. மேட்ரோனுவின் முன் இருந்த சர்க்கரைக் கிண்ணத்தின் விளிம்பு அதை ஏற்று மிளிர்ந்தது. இந்தச் சிறு பிரகாசம் அவள் கவனத்தைக் கவர்ந்தது. அவள் தன் புருவங்களேச் சுருக்கிக்கொண்டு, கண்கள் வலி எடுக்கும் வரை, அதையே உறுத்து நோக்கியவாறு உட்கார்ந்திருந்தாள். அப்புறம் பாத்திரங்களே வேறு இடத்தில் வைத்துவிட்டுப் படுக்கப் போளுள். . . . - கிரிகரி திரும்பிய போது கன்ருக இருட்டி யிருந்தது. படிக் கட்டுகளில் எழுந்த அவனது காலடி ஓசையைக் கொண்டே அவன் சுமுகமான கிலேயில் இருக்கிருன் என்பதை அவள் உணர முடிந்தது. அவன், அறையில் நிலவிய இருளேச் சபித்துக் கொண்டே படுக்கையை அணுகினன்; அவள் பக்கத்தில் அமர்ந்தான். - விஷயம் தெரியுமா?" என்று கேட்டு லேசாகச் சிரித்தான் அவன். - - என்னவாம்: நீயும் என்னேடு அங்கேவேலலைபார்க்கப்போகிருய்." "எங்கே?' என்று நடுங்கும் குரலில் அவ ள் கேட்டாள்.