பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ஆர்லோவ் தம்பதிகள் 'நான் வேலை பார்க்கப் போகிற அதே இடத் தில்தான்' என்று அவன் வெற்றிப் பெருமிதத்தோடு அறிவித்தான். உடனே அவள் அவனுடைய கழுத்தைச் சுற்றித் தன் கரங்களே வளைத்து அவனே இறுக அணேத்து, அவன் உதடுகளில் முத்த மிட்டாள். இது முற்றிலும் எதிர் பாராததாக இருந்ததால் அவன் அவளே விலக்கித் தள்ளிஞன். தான் நம்ப வேண்டும் என்பதற்காக அவள் அப்படி நடிக்கிருள் என்று தான் அவன் நினைத்தான். 'இவள் அங்கே வேலை செய்ய விரும்பவே இல்லை. இலச்சை கெட்டவள். சும்மா கம்ப வைக்க முயற்சிக்கிருள். அவள் புருஷன் பரம முட்டாள் என்ற கினேப்பு அவளுக்கு. வெறும் துப்புக் கெட்டவள்!' என்று அவன் மனம் பேசியது. அவளைத் தரையிலே பிடித்துத் தள்ள வேண்டும் என்கிற திடீர் உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று அவன் சங்தேகத்தோடு கேட்டான். - 'ஏனென்ரறுல் அப்படித்தான்' என்று நழுவலாக பதிலளித்தாள் அவள். "உன் பாசாங்கு எதுவும் வேண்டாம். உன்னை நான் நன்றுக அறிவேன்.” "ராசா! எனது ஆண் சிங்கமே!” "ஏய். இதை விட்டு வீடு. இல்லையோ சரியானபடி கொடுப்பேன்.”