பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் 99

கிரிகரி, என் அன்பே' "இந்தா பாரு, நீ நீசமாத்தான் பேசுகிறுயா?”

அவளுடைய கொஞ்சுதல்களினல் அவனுடைய கொதிப்பு ஓரளவு தணிந்து போனதும் அவன் ஆர்வத் தோடு அவள் பக்கம் திரும்பி, 'நீ பயப்பட வில்லையா?” என்று கேட்டான். "எதற்கு பயம்? நாம் தான் ஒன்ருக இருப்போமே. இருக்க மாட்டோமா என்ன?’ என்று அவள் சகஜமாகக் கூறினுள். - அவ்விதம் அவள் பேசியதைக் கேட்க மகிழ்வாக இருந்தது அவனுக்கு. - "நீயும் தேர்ந்தவள் தான்' என்று சொல்லி அவன் அவளே அழுத்தமாகக் கிள்ளி விடவே, அவள் கீச்சிட்டுக் கத்தினுள். 禁 柴 撒 ஆர்லோவ் தம்பதிகள் வாசஸ்தலத்தில் சேர்ந்த முதல் நாளன்று, மிக மிக அதிகமான நோயாளிகள் புதிதாகக் கொண்டு வரப்பட்டார்கள். தொழிலுக்குப் புதியவர் களான அவ்விருவரும் தங்கள் வாழ்க்கையில் பரபரப் பற்ற கிதானமான போக் கி லே பழகியிருந்ததால், இப்போது வேகத்தோடு இயங்கிய அலுவல்களின் மத்தி யில், கிலே குலேந்து பயந்து தவித்தார்கள். கைப் பழக்கம் இல்லாததால் நேரும் திகைப்பையும், இன்னது செய்ய வேண்டும் என்று பிறர் சொல்வதைப் புரிந்து கொள் வதற்குத் தாங்கள் படும் சிரமத்தையும். தங்கள் கினேவில் பதிகிற பயங்கரத் தோற்றங்களையும் கண்டு அவர்கள் குழப்பம் அடைந்தார்கள். தங்களால் இயன்ற மட்டும் பாடுபட்டார்கள் அவர்கள். ஆயினும் அவ்விருவரும்