பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 101 இடத்துக்குத் தாக்கிச் செல்கையில் அவர்களே எப்படிப் பிடித்துக் கொள்வது, வெவ்வேறு சமயங்களில் எவ்விதம் கடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி யெல்லாம் அவர் எடுத்துச் சொன்னர். முடிவாக, அவர்கள் ஸ்கானம் செய்தாயிற்ரு என்று அவர் கிரிகரியையும் மேட்ரோனவை யும் விசாரித்தார். ஆளுக்கு ஒரு வெள்ளே முந்தானே கொடுத்தார். அந்த டாக்டர் மென்குரல் பெற்றிருந்தார்; வேகமாகப் பே சி ைர். ஆர்லோவ் தம்பதிகளுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. வெண்ணிற உடை தரித்தவர்கள் அங்கும் இங்குமாக விரைந்து கொண்டி ருந்தார்கள். அவர்கள் கடந்து கொண்டிருந்த வேளையிலே உத்திரவுகளிட்டார்கள்: உத்திரவுகளே ஏற்றுக் கொண் டார்கள். வியாதிக்காரர்கள் அழுதார்கள்; அரற்றிஞர்கள். தண்ணிர் தெறித்து விழுந்தது; வழிந்து ஓடியது. இவ் ஓசைகள் எல்லாம் இனிம்ை யில்லாத காற்றங்கள் கனத் துக் கவிந்து கிடந்த காற்றிலே கலந்து மிதந்தன. அதனல், டாக்டர் பேசும் ஒவ்வொரு சொல்லும், நோயாளி உயிர்க் கும் ஒவ்வொரு அரற்றலும் தத்தமக்கென்று தனியாக வலி கொடுக்கும் காற்றம் பெற்றிருந்தது போல் தோன்றியது. முதலில் அங்கே குழப்பத்தைத் தவிர வேறு எதையும் கிரிகரி காணவில்லை. அந்தச் சூழ்நிலையில் தானும் இணங்கி இயங்குவதும் சாத்தியமல்ல - மூச்சு முட்டித் தான் சீக்கிலே விழ நேரிடலாம் என்றே அவன் நிச்சயித்தான். ஆனல் ஒரு சில மணி நேரத்திலேயே, அங்கு நெடுகிலும் பரவியிருந்த சக்தியினல் அவனும் பாதிக்கப்பட்டான். அவனும் சுறுசுறுப்படைந்து, பயனுள்ள பணி புரிவதற்கு ஏதேனும் ஒரு வழி காண்பதில் ஆர்வமாக இருந்தான். ஏனெனில், தானும் அந்தப் பரப்பிலே கலந்து கொண்டால் தான் அமைதியும் கல்லுணர்வும் பெற முடியும் என அவன் உணர்ந்தான்,