பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் - i03 ஒன்றிரண்டு தடவைகள் அவன் அவ் வாசஸ்தலத் தின் தாழ்வாரத்தில் வேகமாகச் செல்லும் தன் மனேவி யைக் காண முடிந்தது. அவள் முன்னேவிட மெலிந்திருந் தாள். அவள் முகம் சாம்பல் கிறமாக மாறியும் சஞ்சலம் நிறைந்தும் தோன்றியது. விஷயம் எல்லாம் எப்படி உள்ளன?' என்று இகு சமயம் அவன் கேட்டான். அவள் உணர்ச்சியற்ற சிரிப்பு சிரித்து விட்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் போய் விட்டாள். அவனது இயல்புக்குப் புறம்பான ஒரு எண்ணம் கிரிகரி உள்ளத்தில் உதயமாயிற்று. இந்தக் கொடிய இடத்துக்குத் தன் மனேவியைத் தான் இழுத்து வந்தது தவருகவே இருக்கலாம்; அவளுக்கு ஏதாவது நேர்ந்துவிடக் கூடும் என்று அவன் நினைத்தான். ஆகவே அவளை மறு முறை கண்டபோது, அவன் கடுமையாக மொழிந்தான்: "நீ அடிக்கடி உன் கைகளேக் கழுவிக் கொள்ள வேண்டும். உன்னே நீயே சிரத்தையோடு கவனித்துக் கொள்!’ - "கான் அப்படிச் செய்யாவிட்டால்?” என்று வெடுக் கெனக் கேட்டு, தனது வெண்மையான சிறு பற்கள் முழுவதும் தெரியச் சிரித்தாள் அவள். அது அவனுக்குக் கோப மூட்டியது. கேலி பேசுவதற்கு அருமையான இடம் பாரு அறிவு கெட்ட மண்டுகம்! எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக இருக்கிருர்கள் இங்தப் பெண்கள்! ஆனால் மேட்ரோனு அவன் கண்களின் கோபக் கனலேக் கண்டு விட்டாள். அவன் சுடு சொல் எறிவதற்கு முந்தி அவள் பெண்கள் பகுதிக்குள் ஒடி மறைந்து கொண்டாள்.