பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 105 மறுமுனையைப் பற்றியிருந்தவன் திரும்பி, செத்தவனே ஒரு கணம் கிதானத்தோடு ஊன்றி கோக்கினன். பிறகு கடுமையாகப் பேசிளுன்: "எதற்காகப் பொய் சொல்லுகிருய்? அவன் சவப் பெட்டிக்குச் சரியாக இருக்கும்படி கையை நேர்படுத்திக் கொண்டான். அது உனக்குத் தெரியாதாக்கும் சும்மா வா." கிரிகரிபயத்தால் கடுங்கிக்கொண்டே, “ஆளுல் அவன் அசைங்தானே” என்று சொன்ன்ை. அட விசித்திரப் பிரகிருதியே, சும்மா வா. சொல்வதை உன்னுல் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ன? அவன் சவப்பெட்டிக்கு வசதியாகத் தன் கையை கோர்க்கிக் கொண்டான் என்கிறேன். அதனால் அவன் அசைந்தான். உனது அறியாமை என்ருவது ஒரு நாள் உன்னே தொல்லை யில் மாட்டிவைக்கத்தான் போகிறது. உயிரோடு இருக்கிற தாம் செத்த பிணத்தைப் பற்றிச் சொல்வதற்கு அருமை யான விஷயம் தான். நீ தொக்தரவு கிளப்பிவிட ஆசைப் படுகிருயா? பிணங்களின் அசைவைப் பற்றி நீ ஒருவரிட மும் ஒன்றும் பேச வேண்டாம். எல்லாப் பிணங்களும் அப்படித் தான் செய்கின்றன. இது தெரிந்தால், ஊர் பூரா வும் விஷயம் பரவி விடும். கொசு ஒரு யானே அளவு பெரி தாகி விடும். அப்புறம் நரக வேதனை தான். ஆட்களே உயி ரோடு புதைக்கிருர்களாமே என்று ஜனங்கள் படை படை யாகத் திரண்டு வந்து விடுவார்கள். நம்மைத் தாக்கிகம் உயிரை அப்புறப்படுத்தி விடுவார்கள். உன் உயிரைக் கூடத்தான். இதோ இவனே இடது பக்கமாகத் தள்ளு.” அந்த மனிதனின் கலக்கமில்லாத குரலும், அவசர மில்லாத கடையும் கிரிகரியை சாந்தப்படுத்தும் சக்தி பெற்றிருந்தன.