பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 107 யுத்த களத்தில் இருப்பது போல் தான். யுத்த களத்தில் உள்ள நர்சுகளையும் டாக்டர்களையும் பற்றி நீ எப்போ தாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? துருக்கிப் படையெடுப் பின் போது நான் ஏகப்பட்ட பேரைப் பார்த்தேன். அர்டகான், கார்ஸ் ஆகிய இடங்களில் தான். அவர்கள் போர் வீரர்களான எங்களைப் பார்க்கிலும் தைரியமான வர்கள் தான்.நாங்கள் கைகளில் துப்பாக்கிகள். குண்டுகள், பாய்னட்டுகள் சகிதம் யுத்தத்தில் பிரவேசிக்கிறோம். ஆனால் அவர்களோ குண்டுகள் மழையாக விழுந்து கொண் டிருக்கிற போது, கவலை இல்லாமல் உலாவப் போகிற மாதிரி அங்குமிங்கும் நடமாடுவார்கள். எங்களை அல்லது துருக்கியரை அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல் வார்கள். அவ்வளவு நேரமும் உய்ங், பிங்ங், பேங்ங் என்று குண்டுகள் சிதறிக்கொண்டே யிருக்கும். சில சமயம் எவராவது ஒரு டாக்டரின் பின் தலையில் அடிபடும்-- பிங்ங் - அவ்வளவு தான். ஆள் காலி!" இந்தப் பேச்சுக்கும், நல்ல ஜோரான வோட்கா மதுக் குடிக்கும் பிறகு, கிரிகரி ஊக்க உணர்ச்சி பெற்றான். "உரலிலே தலையைக் கொடுத்த பிறகு உலக்கைக்கு பயப்பட முடியுமா? என்று அவன், நோயாளிகளில் ஒருவனின் கால்களைத் தேய்க்கும் வேளையில், தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அவனுக்குப் பின்னால் யாரோ புலம்பிக் கொண்டும் துயரக்குரலில் கூப்பிட்டுக் கொண்டு மிருந்தார்கள். "தண்ணீர்... ஓஓ..தயவு செய்யுங்கள்...யாராவது" 'ஐயோ! இன்னும் சூடாக! அது இதம் தருகிறது. டாக்டர். கடவுளுக்குப் பொதுவாகச் சொல்கிறேன். கொதிக்கும் நீரை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சேர்க்கச் சொல்லுங்கள்!