பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 109 மெலிந்து விடுவாய். அது தான் நல்லது. அது உனது நேர்த்தியான திட்டங்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்து விடும்" என்று தன் மனசிலேயே அவளை எதிர் நிறுத்திப் பேசிக்கொள்வான் அவன். கணவன் என்ற தன்னுடைய அந்தஸ்துக்கு இழிவு தேடி வைக்கும் யோசனைகளைத் தனது மனைவி போற்றிப் பாதுகாக்கிறாள் என்று அவன் சதா சந்தேகித்து வந்தான். அவனுடைய சந்தேகங்கள் அவ்விஷயத்தைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்கும்படி அவனைத் துரண்டுகிற சமயங்களில், அவள் அத்தகைய எண்ணங்களை வளர்ப்பதற்கு நியாயமான காரணம் உண்டு என்பதை அவனும் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேவலமான சிறு வாழ்வுதான் அவன் வாழ்ந்தது. அவ்வித வாழ்க்கை முறை காரணமாக ஒருவர் மூளையில் சகல விதமான எண்ணங்களும் தோன்றுவது இயல்புதான். இந்த ரக வெளிப்படையான ஆராய்ச்சி அவனுடைய சந்தேகங்களை நிச்சயமான நம்பிக்கையாக மாற்றி விடுவதற்குப் போதுமானதாக அமைந்தது. நிரந்தரமாக இல்லாவிட்டாலும் தற்காலிகமாகவேனும் அந்நம்பிக்கை நிலை பெற்றிருக்கும். அவன் தனது அடித்தள அறையை விட்டு வெளிப்பட்டு ஏன் இந்த நகர வாயிலில் புகுந்தான் என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொள்வான். அதற்கு உரிய விடையை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவனுடைய தீர்க்காலோசனை அவனுள் எங்கோ ஆழமான இடத்தில் இயங்கிக் கொண்டு தானிருக்கும். டாக்டர்களின் அலுவல்களைத் தீவிர கவனத்தோடு அவன் பின்பற்றி வந்தது, அவனுடைய சிந்தனைகள் அவனது வேலைக்குக் குந்தகமாக எழுந்து நிற்காதபடி தடுக்கும் எல்லையாக அமைவது போல் காணப்பட்டது. இங்கே அவர்கள் உழைப்பது போல் மக்கள் தன்னலமற்றுப்