பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

114 ஆர்லோவ் தம்பதிகள் அவன் தலையைத் துரக்கி அவளே நோக்கினன். அவள் அவனேப் பார்த்து புன்னகை புரிந்தாள். அவளுடைய கூங் தல் ஒழுங்காக வாரி விடப்பட்டிருந்தது. அவள் தனது வெண்ணிற உடையில், அதிசயமான சுத்தத்துடனும் புதுமையுடனும் பிரகாசித்தாள். அவள் இந்த விதமாகக்காட்சி அளிப்பதைக் காண் பதே மனுேரம்மியமாக இருந்தது. ஆனால், அவ் வாசஸ் தலத்தில் உள்ள மற்ற ஆண்கள் பார்வையிலும் அவள் இவ்வாறு தானே தோன்றுவாள் என்ற எண்ணத்தினுல் அவன் குழப்பம் அடைந்தான். "யாருடைய தேநீரை நான் குடிக்க வேண்டுமாம்? எனக்கு என்று தனியாக டீ இருக்கிறது. அதற்காக கான் என் வேறு இடம் போக வேண்டும்?” என்று அவன் கடு கடுப்பாய் பேசினுன். -- - - - . . . "நானும் உன்னேடு வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து டீ குடிப்போம்” என்று அவள் சொன்னுள். இனிய மென் கோக்கு நிறைந்த கண்களோடு அவள் அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள். கிரிகரி பார்வையைத் திருப்பிக் கொண்டான்; தானும் வருவதாகச் சொன்னன். - அவள் போன பிறகு, அவன் மறுபடியும் படுத்து விட்டான். அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது: "அவளிடம் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது? என்னேத் தன்னேடு டீ குடிக்க அழைப்பது, என்னே அது மாதிரிப் பார்ப்பது- இதெல்லாம் என்ன? ... அவள் மெலிந்து காணப்படுகிருளே.'