பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 ஆர்லோவ் தம்பதிகள் தண்ணிரைத் தனக்குச் சொந்தமான ஸமோவாரிலேயே கொதிக்க வைத்துக் கொள்வது வழக்கம். ஏனென்றால் ஆஸ்பத்திரிப் பாத்திரத்தில் ஒருமிக்கக் கொதிக்க வைக்கப்படுகிற தண்ணிரை உபயோகிப்பது அவளுக்குப் பிடிக்காது. இவ்விஷயங்களை எல்லாம் அவள், கீறல்விழுந்ததுபோன்ற குரலில், ஆர்லோவிடம் அறிவித்தாள். பிறகு, ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சுயம்புவான வான மண்டலக் காற்றைக் கொண்டு சுவாசப்பைகளை நிரப்பிக் கொள்ளும்படி உபசரித்து விட்டு அவள் வெளியே போனாள். "நேற்று நீ களைத்துப் போனயோ?” என்று கிரிகரி தன் மனைவியிடம் கேட்டான். "மிகவும் பயங்கரமாக!" என்று அவள் உற்சாகத்துடன் பதிலளித்தாள். "என்னுடைய பாதங்கள் இற்றுப் போகும் என்று எண்ணினேன். எனக்கு ஒரே மயக்கம். அவர்கள் என்னிடம் என்ன சொன்னார்கள் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அப்படியே விழுந்து மடிந்து போவேனே - சாயங்காலம்வரை தாக்குப் பிடிப்பதே கஷ்டம்- என்று நான் ஒரே அடியாகப் பயந்து விட்டேன். ஓயாமல் நான் பிராத்தனை செய்து கொண்டு இருந்தேன். 'கடவுளே, எனக்கு உதவி பண்ணு' என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்." "உனக்கு பயமாக இருக்கிறதா?” "இறந்தவர்களைப் பற்றித் தான் எனக்கு பயம். உனக்குத் தெரியுமா?" என்று அவள் அவன் பக்கமாக வளைந்து, பயம் கலந்த குரலில் ரகசியம் பேசினாள்: "அவர்கள் செத்த பிறகும் கூட அசைகிறார்கள். உண்மையாகச் சொல்கிறேன், அவர்கள் அசைகிறார்கள்.”