பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்ப திகள் 121 அவனுடைய எண்ணம் இயல்பாக அவன் மனைவி பக்கம் திரும்பியது. அவளிடம் அவன் எதையும் பயம் இல்லாமல் சொல்லலாம்.தனது வெற்றியைக்கண்டு அவள் பொருமைப் படுவாளோ, அல்லது புரோனின் செய்தது போல் தன்னு டைய பூட்ஸில் கார்பாலிக் ஆஸிடைக் கொட்டி வைப் பாளோ என்று அஞ்ச வேண்டிய அவசியமே கிடையாது. தொடர்ந்து வந்த தினங்கள் முதல் நாளைப் போலவே வேலை மிகுதியும் பரபரப்பும் நிறைந்தே இருந்தன. எனினும் கிரிகரி முன்போல் சோர்ந்து போகவில்லை. ஏனென்ருல் ஒவ்வொரு நாளும் அவன் தனது சக்தியை மிக்க அறிவுடன் செலவு செய்தான். பலவகை மருந்துகளின் விதம் விதமான மணத்தைப் புரிந்து கொள்ள அவன் கற்றுக் கொண்டான். ஈதர் எனும் மருங்தை அறிந்து கொண்ட பிறகு, அவன் மற்றவர் அறியாதபடி அதை அவ்வப்போது நீண்ட மூச்சிழுத்து உட்கொண்டு வந்தான். பெரிய கிளாஸ் கிறைய வோட்கா மது குடிப்பதின் மூலம் பெறக் கூடிய இன் பத்தை ஏகதேசமாக இதுவும் தந்தது என்பதை அவன் கேட்டிருந்தான். சொல்லப்படுவதை கிரகித்துக் கொள்ளும் வேகம், இரக்க சுபாவம், பேசும் குணம், நோயாளிகளுக்கு உ ற்சாகமூட்டும் திறமை ஆகிய அவனுடைய பண்புகளின் காரணமாக டாக்டர்களும் மாணவர்களும் அவனே அதிகம் அதிகமாக விரும்பலானர்கள். இந்தப் புது விதமான வாழ் வின் மூலம் அவன் பெற்ற அனுபவ உணர்வுகள் எல்லாம் சேர்ந்து கிரிகரியின் உள்ளத்தில் அதிசயமான ஒர்வித உயர்வு உணர்ச்சியைத் துண்டி விட்டன. தான் அசாதாரணமான தன்மைகளுடைய மனிதன் என்று அவன் கருதினன். மற்ற எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் இழுக்கக்கூடிய ஏதாவதொரு காரியத்தைஒவ்வொருவரையும் பிரமிக்க வைக்கும் ஏதேனும் ஒரு