பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஆர்லோவ் தம்பதிகள் "கிரீகரி, என் செல்வமே, என் அன்பே' என்று அவள் முணுமுணுத்தாள். 'மறுபடியும் நீ எனக்கு எவ் வளவு அற்புதமானவன் ஆகி விட்டாய், என் மாவீர மனிதனே! நமக்குக் கலியாணமான புதுசில் காமிருவரும் வாழ்க்தோமே, அதுபோல் தோன்றுகிறது. இதுவும். என் மனம் புண்படும்படியாக நீ எதுவும் பேசுவதில்லை. எப் பொழுதும் என்ளுேடு பேசிக் கொண்டே இருக்கிருய் உன் மனசில் இருப்பதை எல்லாம் என்னிடம் சொல்கிருய். நீ என்னே அடிப்பதே இல்லை......' "அதைத்தான் ஆேசையோடு எதிர்பார்க்கிருயாக்கும்? நீ விரும்பினுல் நான் உனக்குச் சரியான உதை கொடுக்க முடியும்' என்று அவன் அன்போடு கேலி செய்தான். தனது மனைவி பேரில் ஏற்பட்ட காதலும் கருணையும் கலந்த உணர்வு அலை ஒன்றில் சிக்கியிருந்தான் அவன். அவள் கூந்தலை வருடத் தொடங்கினன் அவன். அது மனேகரமான - அவள் ஒரு குழங்தை போலவும் தான் தங்தை போன்றும் ஒரு உணர்வு - தோன்றியது. அவன் மார்பில் தவழ்ந்து, மிருதுவான கதகதப்பான பங்துபோல் சுருண்டுகிடந்த மேட்ரோன உண்மையாகவே ஒருகுழங்தை மாதிரித் தான் இருந்தாள். "என் கண்ணுளா!' என்று முனங்கினுள் அவள். அவன் ஆழ்ந்த பெருமூச்சு உயிர்த்தான். அவனுக்கும் அவளுக்கும் புதிதான சொற்கள் தாமாகவே அவன் வாயி லிருந்து ஓடி வந்தன. * . "என் சிறு பூனேக்குட்டியே! நீ என்ன தான் சொல்லு. உனக்கு உன் புருஷனைப் போன்ற நண்பன் யாருமே கிடையாது. நீயோ வேறு யாருக்காகவோ கண்வீசிக் கொண் டிருக்கிருய். நான் சில சமயங்களில் உன்னிடம் கொடுமை யாக கடந்து கொண்டால், அதற்குத் துயரம் தான் காரணம்