பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 - ஆர்லோவ் தம்பதிகள் இருக்கிரறுய். இதன் அர்த்தம் என்ன? அடுத்தாற் போல் என்ன நடக்கும்?” "கடவுள் நினைக்கிறபடி தான், கிரிகரி' என்று மேட் ரோனு அமைதியாகப் பேசினுள். ஆனல் கேற்று ராத்திரி, அவ்வளவு அன்பாகப் பழகியதற்காக, நீ வருத்தப்பட வேண்டியதில்லை.” "நல்லது. அந்தப் பேச்சை விடு' என்று குறுக்கிட் டான் கிரிகரி. "நாம் இரண்டு பேரும் சேர்ந்து வாழ் வதால் நன்மை ஏதாவது வந்து விடும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. பழைய வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருந்து விடவில்லைதான்.ஆனலும் இந்தப் புது வாழ்வுகூட எனக்கு ஒத்து வரவில்லை. கான் குடிக்கா விட்டாலும், உன்னே அடித்து ஏசாவிடிலும்...' அவள் வெறி கலங்த சிறு சிரிப்பு சிதறினுள். அவற்றில் எதையும் செய்வதற்கு உனக்கு இப்போதெல்லாம் நேரமே இடைப்பதில்லே' என்ருள். 'குடிப்பதற்கு வே ண் டி ய நேரத்தை நான் எப்பொழுது வேண்டுமானலும் தேடிக் கொள்ள முடியும் என்று சொல்லிப் புன்னகை புரிந்தான் அவள் கணவன். "ஆல்ை நான் குடிக்க விரும்பவில்லை. அதுதான் அதிசயம். ஆயினும், எண்ணிப் பார்க்கும் பொழுது, நான் வெட்கப் படுகிறேன; இல்லே, பயப்படுகிறேன என்பது எனக்கே தெரியவில்லே. அவன் தன் தலையை பின்புறம் சாய்த்துக் கொண்டு சிந்தனையில் ஈடுபட்டு விட்டான். "உனக்கு என்ன கோளாறு ஏற்பட்டிருக்கிறது என் பதை கடவுள் தான் அறிவார்' என்று நீண்ட பெருமூச் சுடன் கூறினுள் மேட்ரோனு, "நாம் கடுமையாக உழைத்த போதிலும், இங்கு நாம் வாழ்வது நல்ல வாழ்க்கையே