பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 135 சாவதும், அதன் மூலமாக நான் நல்ல நிலை அடைந்து கொண்டிருப்பதும்! அது தான் வாழ்க்கை!" சிரித்துக் கொண்டே எழுந்து அவன் வேலைக்குப் போனான். தாழ்வாரத்தில் நடந்து போகிற பொழுதே, மேட்ரோனாவின் பேச்சை வேறு எவரும் கேட்காதது துரதிர்ஷ்டம் தான் என்று அவன். எண்ணினான். "அவள் பேசியது அழகான பேச்சு. அவள் பெண்தான். ஆயினும் அவளும் ஒன்றிரண்டு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறாள். நோயாளிகளின் முனகல்களும் கடுமையான மூச்சு வாங்குதல்களும் கலந்து எழுந்து வந்த ஆண்கள் வார்டினுள் புகும் பொழுது அவன் இனிமையான மனநிலைமை யோடு விளங்கினான். வரவர தான் தனது கணவனுக்கு முக்கியமானவளாக மாறி வருவதை மேட்ரோனா உணர்ந்தாள். அதை உறுதிப் படுத்தும் முறையில் அவள் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யலானாள். அவள் நடத்திய சுறுசுறுப்பான சக்தி மிகுந்த வாழ்க்கை தன்னைப் பற்றித் தானே உயர்வாக மதிக்கும்படி தூண்டியது. சிந்தித்து விஷயங்களை எடை போட்டு மதிப்பிடும் சுபாவம் பெற்றவள் அல்ல அவள். என்றாலும், அடித்தள அறையில் அவள் வாழ்ந்த நிலையை, முழுநேரமும் புருஷனுக்குப் பணி விடை செய்தும் தங்கள் சிறு குடும்பத்தில் அக்கறை காட்டியும் வாழ்ந்த வாழ்க்கையை அவள் நினைத்துப் பார்க்கும் வேளைகளில், தனது இறந்த கால வாழ்வை நிகழ்கால வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பாராமல் இருக்க முடியாது அவளால். கொஞ்சம் கொஞ்சமாக, அந்தப் பொந்தில் அவர்கள் வாழ்க்கை நடத்தியதன் சோக நினைவு அவள் மனதை விட்டு மங்கி மறைந்தது. வாசஸ்தலத்தில் உள்ள அதிகாரிகள் அவளுடைய திறமையையும் உழைப்பையும் மெச்சி அவளிடம் அன்பு காட்டினார்கள். ஒவ்வொருவரும்