பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ஆர்லோவ் தம்பதிகள் "எவ்வளவு துடிப்பு மிகுந்த வீட்டில் இவன்! இது உனக்கு எப்படித் தான் ஏற்பட்டதோ? "என்றான் கிரிகரி. நோயின் கோரப் பிடிப்பில் சிக்கித் தவித்த குழந்தையின் தோற்றத்தினால் அவன் விசேஷமாக பாதிக்கப்பட்டிருந்தான். அவன் வேதனையோடு தலையை ஆட்டிக் கொண்டு நின்ற போது, அவனுடைய உள்ளத்தில் முட்டிக் குழம்பிய உணர்ச்சிகள் எல்லாம் ஒற்றைக் கேள்வியாகத் திரண்டன:

"ஒரு குழங்தை ஏன் இந்த நோயை அடைய வேண்டும்?"  

ஸென்கா நடுங்கினான். எதுவும் பேசவில்லை. அவர்கள் அவனைப் படுக்கையில் போட்டார்கள். வான வில்லின் வர்ண ஜாலமெல்லாம் குழம்பிக் கிடந்த அவனுடைய கந்தல் உடையை கழற்றத் தொடங்கினார்கள். "எனக்குக் குளிர்கிறதே" என்றான் ஸென்கா. "இப்பொழுது உன்னே வெந்நீரில் குளிப்பாட்டி, உனக்குக் குணம் அளிக்கப் போகிறோம்” என்று கிரிகரி சொன்னான். ஸென்கா ரகசியக் குரலில் முனங்கினான்: "நீங்கள் என்னை குணப்படுத்த முடியாது. கிரிகரி மாமா, கொஞ்சம் குனியேன்! ... உன் காதை இப்படிக் கொண்டு வா... வாத்தியத்தை நான் திருடிவிட்டேன். அது மரக் கொட்டகையில் இருக்கிறது... மூன்று நாட்களுக்கு முந்தி தான் முதன் முதலாக நான் அதைத் தொட்டேன்... அதாவது, நான் அதைத் திருடியதற்குப் பிறகு... அது அற்புதமான பொருள். அதை நான் ஒளித்து வைத்தேன்...அப்பதான்... எனக்கு வயிற்று நோவு வந்தது. தெரிகிறதா? ஏனென்றால், நான் பாபம் செய்து விட்டேன்... படிக்கட்டின் கீழே சுவரில் அது தொங்குகிறது. அதற்கு முன்னால் நான்