பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

148 ஆரிலோவ் தம்பதிகள் கடியாரத்தின் பெண்டுலம் நிமிஷங்களின் ஓட்டத் தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது. மழைத் துளிகள் ஜன்னல் கண்ணாடியில் ஓயாது கொட்டிக்கொண்டிருந் தன, ஒன்றின் பின் ஒன்றாக மணி ஊர்ந்து சென்றது. மழை பெய்து கொண்டே இருந்தது. அவள் அசையாமல் படுக்கையில் விழுந்து கிடந்தாள். எரிச்சலுற்ற அவளது கண்கள் கட்டிடத்தின் மேல் தளத்தில் பதிந்து நின்றன. அவள் பற்கள் கெட்டித்து கன்னத்தின் எலும்புகள் துருத்திக் கொண்டு காணப்பட்டன. மேலும் மேலும் மழை சுவர்கள் மீதும் சாளரங்களிலும் சட்சடத்துக் கொண்டிருந்தது. யாருக்கோ எதையோ வலியுறுத்த விரும்புவது போல், சலிப்புத் தருகிற ஏதோ ஒற்றை நாதத்தை வைத்துக் கொண்டு அது திரும்பத் திரும்ப முண முணப்பது போலிருந்தது. அதை வேகமாகவும் அழகாக வும் நிறைவேற்ற இயலாதபடி மந்தசுபாவம் பெற்றிருந்த தனால், உண்மையான நம்பிக்கையின் நேர்மை எதுவுமற்ற, உணர்ச்சி இல்லாத, உபதேசத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்வதன் மூலம் சாதித்துவிடலாம் என்று அது நம்பு வது போல் தோன்றியது. அழுது வடியும் நாளை அறிமுகப்படுத்துவது போல் உதயம் வானத்திலே இலேசான ஒளியைப் பரப்பிய பிறகும் கூட, மழை பெய்து கொண்டிருந்தது. மேட்ரோனா வினால் தூங்க முடியவில்லை. மழையின் ஓயாத ஒற்றை நாதத்தோடு கலந்து பயங்கரமான கேள்வி ஒன்று ஒலித்தது: "இனி என்ன நடக்கும்?" அவளது குடிகாரக் கணவனின் உருவந்தான் அவளுக்கு உரிய பதிலாகப் பளிச்சிட்டது. அன்பு நிறைந்த அமைதியான வாழ்வு பற்றிய கனவைத் துறந்துவிடுவது என்பது அவளுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.அது