பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்.லேரில் தம்பதிகள் --- - - 149 அது சுமந்து வரலாம். மழை லேசாக விழுந்து கொண்டி ருந்தது. இவற்றைத் தவிர அங்கே பார்ப்பதற்கு வேறு எதுவுமில்லை. மேட்ரோன பெருமூச்சுடன் திரும்பி மேஜை முன் அமர்ந்தாள். "இனி என்ன நடக்கும்?' என்பது தான் அவளேக் கவர்ந்த பிரச்னையாக அமைந்தது. அவள் ஒருவித மயக்க கிலேயில் வெகு கேரம் உட் கார்ந்திருந்தாள். ஆயினும் வெளியே தாழ்வாரத்தில் காலடி ஓசை கேட்கும் ஒவ்வொரு சமயத்திலும் அவள் திடுக்கிட்டு கா ற்காலியில் கிமிர்ந்து வாசலை நோக்கித் திரும்பிக் கவனித்தாள். - - ஆனல் இறுதியாகக் கதவைத்திறந்து, கிரிகரி உள்ளே நுழைந்த போது, அவள் திடுக்கிடவுமில்ல; எழுந்திருக்கவு மில்லை. ஏனென்ருல் மாரிகாலத்து மேக மூடாக்கு பூரா வும் வானி லி ரு ங் து இறங்கி வந்து முழுப்பலத்தோடும் அவளைத் தரையோடு தரையாக அழுத்துவது போல் பட்டது அவளுக்கு. கிரிக்ரி வாசல் படியில் கின்று தன் ஈரக் குல்லாயை எடுத்துத் தரை மீது வீசி விட்டு, மிகுந்த ஓசையோடு தனது மனேவியை நோக்கி கடந்தான். அவன் உடைகளில் இருந்து தண்ணிர் சொட்டிக் கொண்டிருந்தது. அவனது முகம் சிவந்து, கண்கள் கலங்கியிருந்தன. அவன் உதடுகள் அசட்டுத் தனமான பெருஞ் சிரிப்பு காட்டி நீண்டிருந்தன. அவனுடைய பூட்ஸினுள் தண்ணிர் தேங்கி ஒலி செய்வதை மேட்ர்ோன கேட்கமுடிந்தது. அவன் மிகவும் வுெறுக்கத் தகுந்த தோற்றத்தோடு காணப்பட்டான். அவள் இதை எதிர்பார்த்ததே இல்லை. "அழகான காட்சிதான்' என்ருள் அவள்.