பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - ஆர்லோவ் தம்பதிகள் அது அவனேக் கொடிய வெறித்தனத்துக்கு உங்தியது. அவன் பைத்தியக்காரன் போல் கூச்சலிட்டுக் கொண்டே, தனது கையைச் சுழற்றி முஷ்டியால் தன் மனேவி தலையின் பின்புறத்தில் வேகமாகக் குத்தின்ை. "நீ என்னதான் செய்யப் போகிருய்? வேசி காயே! என்னடி ஆட்டம் காட்டுகிருய்? நான் உன்னேக் கொன்றே போடுவேன்.' - - அவன் கொடுத்த அறை அவள் தலையை மேஜையோடு கொண்டு மோதியது. ஆயினும் அவள் துள்ளி எழுந்து கின்று தன் கணவன் மீது வெறுப்பு நிறைந்த பார்வை எறிந்தாள். - "என்னை மறுபடியும் தாக்கு, பார்ப்போம்” என்று அவள் உரத்த குரலில் கிதானமாகச் சொன்னுள். "உன் வாயை மூடு!” என்னைத் திரும்பவும் அடியேன். உம், சீக்கிரம்." ஓ-ஓ-ஓ, எ பெண் பேயே!” "இது தான் முடிவு, கிரிகரி. நான் அனுபவித்தது போதும்.” "உன் வாயை மூடு'. என்னை நீ இன்னும் உன் இஷ்டம் போல் ஆட்டி வைக்க நான் அனுமதிக்க மாட்டேன்.' அவன் தன் பற்களை நற நறவெனக் கடித்தான். மறுபடியும் அவளைத் தாக்குவதற்காகத்தானே என்னவோ அவன் ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தான், ஆளுல் அவ்வேளையில் கதவு திறந்தது. டாக்டர் வாஷெங்கோ உள்ளே வந்தார்.