பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 ஆர்லோவ் தம்பதிகள் எதிர்த்துச் சமாளிக்க வேண்டும் எனும் ஒரு வெறி எழுச்சி - எல்லாவற்றையும் தள்ளித் தகர்த்து விட்டு, தனது ஆத்மா சிக்கிக் கொண்டிருக்கிற இடைஞ்சலி லிருந்து தப்பி ஓடவேனும் என்கிற காட்டுத்தன வேகம்கிரிகரியை அடித்துச் சென்றது. அதிவிசேஷமான ஏதோ ஒன்றைச் செய்யவேண்டிய வேளே வந்து விட்டது.தட்டுத் தடுமாறுகிற தனது ஆத்மாவை பிணத்திருக்கிற விலங்கு களே, அந்தச் செயல் உடனடியாகத் தகர்த்துவிடும் என்று அத்தருணத்தில் அவன் உண்ர்ந்தான். அவன் தேகத்தில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவனுடைய வயிற்றின் அடி மட்டத்தில் குளிர்ச்சியான ஒருவித உணர்ச்சி பரவியது. அவன் வெருகுப்பூனே மாதிரிப் பற்களைக் காட்டிக்கொண்டு டாக்டரை நோக்கித் திரும்பி கின்று பேசினன்: "சத்தம் போட வேண்டாம். வீணுக உம்முடைய ரத்தக்குழாய் வெடித்துவிடப் போகிறது. நான் எங்கே இருக்கிறேன் என்பது எனக்கு ரொம்ப கன்ருகத்தெரியும். உயிர்களே அடித்துக் கொல்கிற சாவுக் கிடங்கில் தான் இருக்கிறேன்.' - பிரமித்துவிட்ட டாக்டர் அவன் பக்கமாக அசைங்து கொண்டே என்னது? நீ என்ன சொன்னுய்?' என்று கேட்டார். அபசாரமான எதையோ தான் சொல்லி விட்டதாக கிரிகரி அறிந்தான். ஆயினும் அது அவன் உணர்ச்சிக் கொதிப்பைத் தணிப்பதற்கு மாருக மேலும் அதிகப் படுத்தியது. "அது சரி தான். நீர் அதை மறந்து விடுவீர். மேட் ரோன, உன் சாமான்களை எல்லாம் சேர்த்து மூட்டை கட்டு” என்ருன் அவன்,