பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஆர்லோவ் தம்பதிகள் மேட்ரோன ஜன்னல் வழியாக வெளியே கவனித் தாள். இருளினூடே, மழைக்கும் காற்றுக்கும் ஊடாக, ஒரு மனித உருவம் நகரத்திற்குச் செல்லும் ரஸ்தாவில் வேகமாக கடந்து போய்க் கொண்டிருந்தது. ஈரம் படிந்த சாம்பல் கிற வயல்களுக்கு மத்தியில் தன்னங்தனியாக அவ் உருவம் காட்சியளித்தது....... மேட்ரோனுவின் முகம் மேலும் வெளுத்தது. அவள் விக்கிரக மூலக்குச் சென்று, அங்கே யிருந்த புனித உருவங் களின் முன்னுல் மண்டியிட்டு அமர்ந்தாள். தலே தரை மீது படும்படி திரும்பத் திரும்பத் தாழ்ந்து பணிந்தாள். உணர்ச்சிப் பிரவாகமாக, ஒரு பிரார்த்தனையின் வார்த்தை களை உச்சரித்துக் கொண்டே யிருந்தாள். அதே சமயத் தில் விரல்களினல் அவள் தன் தொண்டையையும் மார்பையும் தேய்த்துக் கொண்டும் இருந்தாள். 弥 路 ’,搭 ஒரு சமயம் நான் ஒரு நகரில் உள்ள தொழிற் பள்ளிக் கூடம் ஒன்றைப் பார்வையிடப் போயிருந்தேன். எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் என்ைேடு துனேக்கு வந்திருந்தார். அந்தப் பள்ளிக்கூடம் நிறுவப்படுவதற்கு அவர் உதவி செய்திருந்தார். வகுப்பு அறைகள் தோறும் என்னே அழைத்துச் சென்ற போது, அவர் அறிவித்தார்- - "நீங்களே பார்ப்பது போல, நாங்கள் பெருமைப்படக் கூடிய விதத்தில் பலவும் உள்ளன. எங்கள் இளைஞர்கள் பிரபலமாக முன்னேறி வருகிருர்கள். நாங்கள் சேர்த்து உள்ள அருமையான உபாத்தியாயர்களைப் பார்த்து நீங்கள் அதிசயிப்பீர்கள். உதாரணமாக, செருப்பு தைக்கும் பகுதியில் உள்ள உபாத்தியாயர்-ஒரு பெண் - எளிய செம்மான் இனத்தைச் சேர்ந்தவள். ஆசையைத் துரண்டும் அழகுக்குட்டி. ஆலுைம் களங்கம் இல்லாத இடத்தை