பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டு குழந்தைகள் 17 "மிகவும் பெருமை பொருந்திய கனவானே...' என்று ஒரு சிறு பையனின் குரல் இசைத்தது. 'ஏழைகளான எங்களுக்கு நீங்கள் ஏதோ கொஞ்சம் உதவக் கூடாதா?” - 'ரொட்டிக்காக ஒரு கோப்பெக்கு. உல்லாச நாளுக் காக” என்று இரு குரல்களும் இணேங்து பேசின. அவர்கள் தான் என் கதையின் நாயகனும் நாயகியும் ஆவர். சிறு ஏழைக் குழந்தைகள் தான். பையன் பெயர் மிஷ்கா பிரைஷ், சிறுமியின் பெயர் காட்கா ரியபாயா. அந்தக் கனவான் நிற்காததனால், அக் குழந்தைகள் அவர் கால்களுக்குள் புகுந்தும் முன்னல் குறுக்கிட்டும் தொடர்ந்தார்கள். காட்கா ஆவலுடன் எதிர் பார்த்த வாறே, "ஏதாவது கொஞ்சம், ஏதாவது கொஞ்சம்'என்று முனங்கிக் கொண்டிருந்தாள். அந்தச் சீமானின் பாதையில் குறுக்கிட்டுக் கொண்டிருப்பதற்குத் தன்னுல் இயன்ற வரை மிஷ்கா பாடு பட்டான். இதை எல்லாம் பொறுக்கும் மட்டும் பொறுத்துப் பார்த்த கனவான் முடிவில் தனது மிருதுவான ரோம அங்கியைத் திறந்து பணப்பையை வெளியே எடுத்தார். அதைத் தன் மூக்குக்கு கேராக உயர்த்தி, அ த னு ள் கனமாய் மூச்சு விட்டுக் கொண்டே, ஒரு காணயத்தை வெளியே எடுத்தார். தன்னை நோக்கி நீண்டு கின்ற, மிக அதிகமாக அழுக்குப் படிந்திருந்த கரங்கள் ஒன்றில் அதை அவர் திணித்தார். உடனடியாக இரண்டு கந்தல் மூட்டைகளும் அந்தச் சீமானின் பாதையிலிருந்து விலகி ஓடி ஒரு வீட்டின் வெளி வாசலில் வந்து ஓய்வுபெறத் துணிந்தன. ஒரு கணம் அந்த