பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 - இரண்டு குழந்தைகள் "நாம் வீட்டுக்குப் போகலாமே" என்று காட்கா சொன்னாள். வெகு நேரமாகக் கேட்டு அலுத்துப் போன மிஷ்கா வெடுக் கென்று பேசினான்: "பழைய பாட்டேதான். நீ எதற்காக வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?” "அங்கே கதகதப்பாக இருக்கும்” என்று காட்கா சுருக்கமாக விளக்கினாள். "கதகதப்பு!” என்று கேலியாகச் சொன்னான் மிஷ்கா. அங்கே எல்லோருமாகக் கூடிக் கொண்டு உன்னை ஆட்டி வைக்கிற போது உனக்கு எப்படி அம்மா இருக்கும்? அல்லது, வோட்கா மதுவை உன் தொண்டைக்குள் ஊற்றி விட, நீ போன தடவை செய்தது போல் கொப்புளிப்பதைப் பார்த்துச் சிரித்தால் வீடாவது வீடு! பே!" தனது மதிப்பை உணர்ந்த-தன்னுடைய அபிப்பிராயங்களின் தவறாத தன்மையில் நம்பிக்கை உடைய ஒருவனைப் போல் அவனும் தன் தோள்களை முன்னுக்குத் தள்ளிக் கொண்டான். காட்கா இழுப்புடன் கொட்டாவி விட்டு, வாசலின் ஒரு மூலையில் சுருண்டு விழுந்தாள். "நீ சும்மா பேசாமல் இரு. குளிராக இருந்தால், பற்களைக் கடித்துக் கொண்டு அதைச் சகித்துக்கொள். அது தானாகவே போய் விடும். நீயும் நானும் என்றாவது ஒரு நாள் நன்றாகக் கதகதப்பு பெற்று விடுவோம். எனக்குத் தெரியும். நான் விரும்புவது என்னவென்றால்-" இந்த இடத்தில் அவன் தனது அன்பான தோழி யின் ஆவலேத் தூண்டி விடும் நோக்கத்தோடு தன் பேச்சைப் பாதியில் நிறுத்தினன். ஆனால் அவளோ கொஞ்சம்