பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 இரண்டு குழந்தைகள் விசில் ஊதினுனே அவன்தான்-ஒரு தடவை. நான் ஓடிக் கொண்டே இருந்தேன். திடீரென்று என்ன ஆச்சு? படார்! இரவு நேரக் காவல்காரனின் தொந்திக்கு நேரே போய் மோதி விட்டேன். அவன் தன் தடியினுல் என் மண்டையில் ஓங்கி அறைக்தான்.” "எனக்கு நினைவு இருக்கிறது. இவ்வளவு பெரிசாக வீக்கம் ஏற்பட்டு விட்டதே' என்று காட்கா சொன்னுள். உடனேயே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கலானுள். - "அது சரி. இவ்வளவு போதும்” என்று மிஷ்கா அமைதியோடு சொன்னுன். "நான் சொல்வதைக் கவன மாகக் கேள்.” - கம்பீரமும் ஆவலும் நிறைந்து விளங்க அவர்கள் இரு வரும் அருகருகே கடந்தார்கள். "நான் அப்பொழுது அங்கே உன்னிடம் பொய் சொன்னேன். அந்தப் பணக்கார ஆசாமி என்னிடம் இருபது கோப்பெக்குகள் தந்தான். பத்து அல்ல. அதற்கு முன்பு கூட நான் பொய் சொன்னேன். வீட்டுக்குப் போக வேண்டும் என்று நீ சொல்லாமல் இருப்பதற்காகத்தான் கான் அப்படிச் செய்தேன். இன்று ரொம்ப நல்ல நாள். நமக்கு எவ்வளவு கிடைத்திருக்கிறது தெரியுமா? ஒரு ரூபிளும் அஞ்சு கோப்பெக்குகளும். அது ரொம்ப நிறையத்தான்!” 'இல்லையா பின்னே!” என்று பெரு மூச்சு விட்டாள் காட்கா. "அவ்வளவு பணத்தையும் கொண்டு ஒரு ஜதை பூட்சு கூட வாங்கலாமே. பழஞ்சாமான்கள் விற்கும் சங்தையிலேதான்.” - "பூட்சா: ஹஅம்ம். உனக்காக நான் ஒரு ஜதை பூட்சு திருடித் தருவேன். கொஞ்சம் பொறுத்திரு.