பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு குழந்தைகள் - 27 வேன் ... எல்லாம் உன் வேலைதான் என்பேன் ... எனக்குக் கவலை இல்லை. எப்பொழுது பார்த்தாலும் நீ ஓடி விடுகிறாய் ... நான்தான் வாங்கிக்கட்ட வேண்டியிருக்கிறது... சதா அவள் என்னைத்தான் பிடித்துக் கொள்கிறாள்.... உன்னை அடிப்பதை விட மிக மோசமாக என்னை அடிக்கிறாள். நான் சொல்லப் போவது அதுதான். ஞாபகம் வைத்துக்கொள்." "இப்பவே போய் நேரடியாகச் சொல்லி விடு. அவள் என்னை அடித்தால் நான் பட்டுவிட்டுப் போகிறேன். உடனே போ... நீ சொல்ல விரும்புவதைச் சொல்லேன்" என்று மிஷ்கா கூறினான். பெரிய வீரன் போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் அவன் தலை நிமிர்ந்து, வாயினால் சீட்டி அடித்துக்கொண்டே கடந்தான். அவன் முகம் ஒட்டிப் போயிருந்தது. கண்களில் குறும்புத்தனம் மின்னியது. அவனுடைய வயசுக்கு மீறிய ஒரு வித உணர்ச்சி பாவம் சதா அம்முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவன் மூக்கு கூர்மையாகவும் கொஞ்சம் வளைந்தும் காணப்பட்டது. "இதோ ஒரு விடுதி. இரண்டு கூட நாம் எதற்குப் போகலாம்?” "சிறுசுக்குள்ளே தான். ஆனால் முதலில் நாம் பலசரக்குக் கடைக்குப்போகலாம், வா." தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டதும் அவர்கள் சிறிய விடுதிக்குள் நுழைந்தார்கள். அங்கே புகையும் ஆவியும் அழுத்தமான புளிப்பு வாடையும் மண்டிக் கிடந்தன. நாடோடிகளும் போர்