பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 இரண்டு குழந்தைகள் வேண்டியது என்னவென்றால், அந்த ஆசாமியின் காலுக்குள்ளே போய் விழு. உன் மேலே விழுந்து விடுவோமோ என்று அவனை பயப்பட வைக்கணும்." "இனி அவ்விதமே செய்கிறேன்" என்று காட்கா தாழ்மையுடன் அறிவித்தாள். அவளுடைய தோழன் அதை அங்கீகரித்து,"நல்லது!" என்று தலையசைத்தான். அது தான் விஷயம். அடுத்தபடியாக, உதாரணத்துக்கு அன்பிசா அத்தையை எடுத்துக் கொள்வோம். அன்பிசா அத்தை யார்? முதலாவதாக, அவள் குடியினால் மந்தமாகி விட்ட ஒரு பெண்பிள்ளை. அது தவிர........' அது தவிர அன்பிசா அத்தை வேறு என்ன என்பது பற்றி மிஷ்கா பாராட்டத் தகுந்த வெள்ளை மனசோடு எடுத்துச் சொன்னான். தங்கள் அத்தையைப் பற்றிய அவனுடைய மதிப்பீட்டை அப்படியே ஏற்றுக் கொண்டு காட்கா தலையை ஆட்டினாள். "நீ அவளுக்குக் கீழ்ப்படிவது கிடையாது. அது சரி அல்ல. நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்,உதாரணமாகப் பேசுவோமே:'நான் நல்ல பெண்ணாக நடப்பேன் அத்தை. சொல்கிறபடியே செய்வேன்...' இப்படி அவளை தாஜாப் பண்ணு. அப்புறம் உன் இஷ்டம் போல் காரியங்களை நடத்து. அதுதான் சரியான வழி.” மிஷ்கா பேச்சை நிறுத்தி விட்டுத் தன் வயிற்றை எடுப்பான முறையில் சொரிந்து கொண்டான். பிரசங்கம் செய்து முடித்த பிறகு சிக்னி எப்பொழுதும் அப்படித்தான் செய்வான். அடுத்தாற் போல் வேறு விஷயம் எதுவும் அவன் மூளையில் உதயமாக வில்லை. ஆகையால்