பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் c 4盘 சரி, தான் செய்வது தப்பு என்பது.அவனுக்குத் தெரியும். இந்த உணர்வு அவனுக்கு அவள் மீதிருந்த வெறுப்பை அதிகப்படுத்தியது. ஏனெனில், அவனுக்குள் அவனது உள்ளத்தின் ஆழத்திலே இருண்ட ஆத்திரம் ஒ ன் று கொங்தளித்துக் கொண்டிருந்தது. சரி அல்லது தப்பு என் பது பற்றிய அவனுடைய ஞானத்தைவிட மிக வலுவாகத் திகழ்ந்தது அது. அவனது உணர்ச்சிகள் அனைத்தும் தெளி வற்றும் துயரோடு அழுத்துவன வாகவுமே இருந்தன. அவற்றை இன்ன தென்று புரிந்து கொள்ள இயலாமல், அவற்றின் பாதக சக்திகளால் அமுக்கப் பெற்றுத் திணறு வதை அவனல் தவிர்க்க முடிய வில்லை. ஆயினும் ஒரு கோப்பை, வோட்கா மது தான் வேதனைகளிலிருந்து தனக்கு விடுதலே அளிக்கும் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெருந்திருந்தது. கிஸ்லியகோவ் எ ன் கி ற வாத்தியக்காரன் அப் பொழுது அங்கு வந்து சேர்ந்தான். சிவப்பு நிறப் பட்டுச் சட்டையும், வெல்வட் மேல் அங்கியும் அணிந்திருந்தான் அவன். அவனது அகன்ற கால் சட்டைகள் கேர்த்தியான பூட்ஸின் மேல் பாகத்தினுள் திணிக்கப்பட்டிருந்தன. அவ னுடைய இசைக் கருவியை பச்சை நிறத் துணிப் பையில் வைத்துத் தன் கைக்குக் கீழ் பற்றியிருந்தான் அவன். அவன் மீசை அம்பு மாதிரி ஒரே கோடாகத் திருகி விடப் பட்டிருந்தது. அவனது குல்லாய் ஒரு காதின் புறமாகச் சரிந்து எடுப்பாக விளங்கியது. அவன் முகத்தில் உற்சாகம் பிரகாசித்தது. அவனுடைய உல்லாச குணம், இசைத் திறமை, உற்சாகம் கிறைந்த மனுேபாவம் ஆகியவைகளுக் காக ஆர்லோவ் அவனிடம் அன்பு காட்டி வந்தான். கவலையற்ற அவன் வாழ்க்கையை எண்ணிப் பொருமை யும் கொண்டிருந்தான்.