பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 玺爵 முற்றத்தைக் கட்ந்து, தனது கணவன் முன்பு உட்கார்ந்து இருந்த சறுக்கு வண்டியை அடைந்து அதில் அமருவாள். மேட்ரோனுவைக் கண்டதும் யாரும் ஆச்சரியம் அடையமாட்டார்கள். அவளுடைய கணவன் போனதுமே அவள் வெளியே வந்து விடுவதை அவர்கள் கண்டு கண்டு பழக்கப்பட்டிருந்தார்கள். கிரிகரி குடித்துவிட்டு வருந்தும் உள்ளத்தோடு மதுக் கடையிலிருந்து திரும்பி வருகிற வரையில் அவள் அதே இடத்தில் உட்காங்ந்திருப்பாள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவள் முற்றத்திலேயே உட்கார்ந்திருப்பது ஏனென்றுல், கீழே குடியிருக்கும் அறையில் ஒரே புழுக்கமாக இருக்கும். அது மட்டுமல்ல; குடிபோதையில் திரும்புகிற கணவன் படிக்கட்டில் பத்திர மாக இறங்குவதற்கு அவள்தான் துணை புரிய வேண்டும். படிக்கட்டு செங்குத்தாகவும் பழுது,பட்டும் இருந்தது. ஒரு தடவை கிரிகிரி படிகளில் தடுக்கி விழுந்து உருண்டு. புரண்டதில், கை மணிக்கட்டு பிசகி விட்டது. அதனுல் இரண்டு வார காலம், அவன் வேலை எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. அவர்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச உடைமைகளைக் கூட சாப்பாட்டுச் செலவுக்காக அவள் அடகு வைக்க வேண்டியது அவசியமாயிற்று. அன்று முதல் மேட்ரோனு அவனுக்காகக் காத்திருப் பதை வழக்கமாக்கிக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரர்களில் யாராவது ஒருவா சில. சமயம் அவள் அருகே சென்று பேச்சுக்கொடுப்பது உண்டு. ஒய்வு பெற்ற உத்தியோகஸ்தரான லெவ்செங்கோ தான் வழக்கமாக அப்படிச் செய்வார். அமைதியான சுபாவமும் நுண்ணறிவும் பெற்றிருந்த உக்ரேனிய வாசி அவர். தொங்கு மீசையும், வழுக்கைத் தலையும், சிவந்த மூக்கும் அவருக்கு இருந்தன.