பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4鳄 ஆர்லோவ் தம்பதிகள் விளையாட்டு எதுவும் அவளிடம் பலிக்காது. வர்ணத் தொழிலாளி மாக்ஸிம் அப்படி முயற்சி பண்ணிப் பார்த் தான். அவள் அவனுக்காக அவனுடைய மூஞ்சியைப் பதப் படுத்தி அனுப்பிவைத்தாள். அதை நானே பார்த்தேன். அவள் அவன் மூஞ்சியிலே மத்தளத்தை இடிப்பது போல குத்து கொடுத்தாளே பார்க்கணும்' உயிர்ப்பும் உணர்ச்சித் துடிப்பும் நிறைந்த சென்கா, பன்னிரண்டு வயதானவன் தான் என்ருலும், பாதிக் குழந்தையும் பாதிப் பெரிய ஆள் ஆகவும் வளர்ந்திருந் தான். கடல் பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவது போல் அவன் தன்னைச் சுற்றிலும் காணப்படுகிற ஆபாசங்கள் அபத்தங் களைப் பற்றி அக்கறையாகச் சிந்திப்பது உண்டு என்பதை விளம்பரப்படுத்துவது போல், இதற்குள்ளாகவே அவன் நெற்றியில் அழகிய கோடு ஒன்று நீண்டு கிடந்தது. இப்பொழுது முற்றப் பகுதியில் நன்ருக இருட்டி விட்டது. அதற்கு மேலே சிறு சதுர வடிவமாகக் கருநீல வானம் நட்சத்திரங்கள் மினுமினுக்க ஒளிமயமாக விளங் கியது. உயரே கின்று பார்க்கும்பொழுது, கெடிது உயர்ந்த கட்டிடங்களால் வேலியிடப் பெற்ற ஆழமான படுகுழி போல் அந்த முற்றம் காட்சி அளிக்கும். அந்தக் குழியின் ஒரு மூலையில் சிறிய மங்கை ஒருத்தி தனது கணவனிடம் பட்ட அடிகளின் வேதனையிலிருந்து தேறிக்கொண்டிருந் தாள். குடிக்கச் சென்ற கணவன் வீடு திரும்புவதை எதிர்‌ கோக்கிக் காத்திருந்தாள். ஆர்லோவ் தம்பதிகளுக்குக் கலியாணமாகி ஏறக் குறைய நான்கு வருஷங்களிருக்கும். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. ஆல்ை பதினெட்டு மாதங்கள் வாழ்ந்து விட்டு அது செத்துப் போயிற்று. அவர்கள்