பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 47 இருவரும் அங்த இழப்பை எண்ணிப் பெரிதும் துயர் உற்ருர்கள். ஆயினும் விரைவில் வேருெரு குழந்தையைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்ை அவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அவர்கள் வசித்த அறை நீளமாய், இருளடைந்து இருந்தது. மேலே குவிந்த கூரை பெற்றிருந்தது. கதவு தவிர, ஜன்னல்களுக்கு எதிர்த்தாற் போல, பெரிய ரஷ்ய அடுப்பு ஒன்றும் அங்கே இருந்தது. அடுப்புக்கும் சுவருக்கும் இடையே குறுகலான வழி ஒன்று காணப்பட்டது. சதுர வடிவமான திறந்த பகுதி ஒன்றில் வந்து சேர்ந்தது. அது. முற்றத்தின் புறமாக அமைக்கப்பட்டிருந்த இரண்டு சாளரங்கள் வெளிச்சம் பரவ வகை செய்தன. அவற்றின் மூலம், சாய்ந்த ஒளிக் கற்றைகளாக உள்ளே புகுந்த வெளிச்சம் தெளிவின்றிக் கனத்து விழுங்தது. அந்த ஒரு அறை ஈரம் கசிந்து, பழமை படிங்து, மற்ற எதனுடனும் தொடர்பு இல்லாமல் வெட்டி விலக்கப்பட்டு விட்டது போல் தோன்றியது. மேலே வாழ்க்கையின் இயக்கங்கள் கிகழ்ந்து கொண்டிருந்தன. ஆயினும் இங்கே, தரை மட்டத் திற்குக் கீழே ஆர்லோவ் தம்பதிகள் குடியிருந்த பொத்தி லுள், அதன் சின்னங்களாக வந்து சேர்ந்தவை விவரணை யற்ற மந்தமான ஓசைகளும், தூசியும், வர்ண பேதங்கள் இல்லாத ஒளிக்கற்றைகள் மட்டுமே யாகும். சுவர் அருகே அடுப்டை அடுத்து, பெரிய மரப் படுக்கை ஒன்று கிடங்தது. மஞ்சள் பரப்பில், வெளிறிய சிவப்பு கிறப் பூக்கள் அணி செய்யும் துணித்திரைகள் அந்தப் படுக்கையைச் சுற்றித் தொங்கின. படுக்கைக்கு எதிரே கிடங்த மேஜையில் தான் செம்மானும் அவன். மனேவியும் கால்ே உணவு சாப்பிடு வார்கள். படுக்கைக்கும் தூரத்திலுள்ள சுவருக்கும் நடுவே உள்ள இடத்தில் தான் அவர்கள் வேலை செய்வார்கள். ஒளித் துரண்கள் இரண்டும் சரிந்து விழுந்ததும் அந்த இடத்தில் தான். - - -