பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

飙 ஆர்லோவ் தம்பதிகள் என சப்திக்கும். சமயாசமயங்களில் கிரிகளி விடுகிற நெடுங் கொட்டாவி கர்ஜனையாகவோ உறுமலாகவோ முடியும். மேட்ரோன பெருமூச்செறிவாள். கிரிகரி பாடினலும் பாடுவான். அவனுடைய குரலில் கரகரப்புத் தட்டும். ஆயி னும் அவன் கன்ருகப்பாடுவான். பாட்டின் வார்த்தைகள் முட்டி மோதிக் கொண்டு சோக நாதமாக நீண்டு கிரிகரி யின் தொண்டையிலிருந்து வேகமாகப் புரண்டு வரும். அவற்றில் ஏதாவது வார்த்தைகள் வெளிப்படாமே கின்று விடுமோ என்று பயந்து கொண்டு அவை ஓடி வரு வது போல் தோன்றும். துயர நிறைவுகளுடன் ஒன்ருகத் தோய்வுற்று நீண்டு. எக்' எனும் ஒலிப்பும் கூடிக் கலக்க, சோகமாய் உரத்து ஜன்னல் வழியாக மிதந்து முற்ற வெளியை அடையும். மேட்ரோனு தனது இனிய வளமான மென் குரலைத் தன் கணவனின் கரகரத் தொனியுடன் இணைய விடுவாள். அவ் இருவரின் முகங்களும் சோக மயமாய் சித்தனே நிறைந்து திகழும். கிரிகரியின் கரிய கண்கள் நீர் மல்கி விளங்கும். சங்கீதம் மேட்ரோனுவை மயக்குவது போல் தோன்றும். அவள் ஒரு விதப் பரவச கிலேயிலே முன்னும் பின்னுமாக அசைவாள்; திடீரென்று உணர்ச்சி மிகுதியினுல் பாட்டைப் பாதியிலேயே நிறுத்து வாள்; பிறகு மீண்டும் சேர்ந்து பாடுவாள். அவர்கள் பாடும் பொழுது அவரவர் இருண்ட வாழ்வின் மந்தத் தன்மையையும் வெறுமையையும் ம ற் ற வ ர் வார்த்தை களில் கூட்டிக் கலக்க முயலும் போது, தத்தமது உள்ளத் தில் அரை குறையாக உ ரு வா கி ய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப் படுத்தும் முயற்சியில் முனைக் திருக்கும் பொழுது, ஒருவரைப் பற்றிய பிரக்ஞை மற்ற வருக்கு இருப்பதே யில்லை. - சில வேளைகளில் கிரிகரி இவ்விதம் இட்டுக் கட்டிப் பாடுவான்: -