பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 芭3 ஆல்ை, அவர்களிடம் அது தான் இல்லை, சதா அவர்கள் ஒன்ருகவே வசித்ததஞல், ஒருவருக் கொருவர் மிகவும் பழகிப் போனர்கள்.ஒவ்வொருவருடைய தனித் தனி வார்த்தையும் அங்க அசைவும் அவர்களுக்குப் பழகிப் போயின. ஒவ்வொரு நாளும் அவர்களுக்கிடையே எவ்விதமான மாறுதலையும் கொண்டு சேர்க்காமல் கழிக் தது. விடுமுறை தினங்களில் சில சமயம் அவர்கள் நண்பர்களைக் காணச் செல்வார்கள். அந்த நண்பர்களும் அவர்களைப் போலவே உணர்வினுல் வறியவர்கள்தான். சில சமயம் கண்பர்கள் பாடிக் களிக்கவும், குடி த் து மகிழவும்-ஏன், சண்டை போட்டு ஆரவாரிக்கவும் கூடஇவர்களேத் தேடி வருவதும் உண்டு. பிறகு மீ ண் டு ம் நாட்கள் விசேஷமற்ற வகையில், கண்ணுக்குப் புலனுகாத ஏதோ ஒரு சங்கிலியின் கனத்த கரணகளைப் போல, அதனதன் வேலே சுமையாய் அழுத்த, பரஸ்பர அலுப்பும் அர்த்த மற்ற கோபமும் உராய, ஒவ்வொன்ருக ஊர்ந்து செல்லும். வேளா வே ளே களி ல் கிரிகரி , முணமுணத்துக் கொள்வான்: - "வாழ்க்கை வெறும் அவிசாரி காய்! அதனிடம் எனக்கு என்ன ஆகவேண்டிக் கிடக்கிறது? உழைப்பதும் ஒப்பாரி வைப்பதும். ஒப்பாரி வைப்பதும் உழைப்பதும் தான்.' கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டு அவன் தன் கண்களே கட்டிட முகட்டுக்கு உயர்த்துவான். உதடுகளில் புன்னகையின் சாயை கிழலாட அவன் பேசுவான்:ஆண் டவனின் அருளுக்கு இணங்க என் அம்மா என்னே இந்த உலகத்தில் கொண்டு சேர்த்தாள். அதற்கு எதிராக நான் எதுவும் சொல்ல முடியாதுதான். அப்புறம் கான் என் தொழிலக் கற்றேன். ஆல்ை அது எத ற் க க