பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆர்லோவ் தம்பதிகள் என்பதுதான் கேள்வி. உலகத்திலே போதுமான அளவு செம்மான்கள் இல்லையா என்ன? போகட்டும். நான் செம்மான் ஆகி விட்டேன். அதனல் எனக்கு என்ன நன்மை ஏற்படுகிறது? வெறுமனே இந்தப் பொங்தில் உட்கார்ந்து ஒயாது உழைக்க வேண்டியது. அப்புறம் சாக வேண்டியது தான். காலரா வேகமாகப் பரவி வருவதாகச் சொல்கிருர்கள். அது பாட்டுக்கு வரட்டும். முன்னொரு காலத்தில் கிரிகரி ஆர்லோவ் என்று ஒரு செம்மான் வசித் தான்; அவன் காலராவில்ை செத்துப் போனன் என்று ஏற்படட்டுமே. இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? கான் வாழ்ந்தேன, செருப்பு தைத்தேனு, செத்தேன இல்லையா என்பது பற்றி யாருக்கு அக்கறை?” தனது கணவனின் வார்த்தைகளில் என்னவோ பயங் கரம் கலந்து கிடப்பதாக உணர்ந்து மே ட் ரோ ன எவ்விதமான குறிப்புரையும் கூற மாட்டாள். அவன் அம்மாதிரி எல்லாம் பேசக் கூடாது; ஏ .ெ ண ன ல் அவை கடவுளுக்கு விரோதமானவை. மனிதர்களின் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பதுபற்றி அவருக்கு மிக கன்ருகத் தெரியும் எ ன் று அவள் எப்பொழுதாவது சில சமயங்களில் சொல்வதும் உண்டு. அல்லது, அவளும் தன் வயம் இழந்து பொறுமையின்றி இருந்தால், குத்தலாக மொழிவாள்: "நீ குடிப்பதை நிறுத்தி விட்டால் வாழ்க்கையில் அதிக ஆனந்தம் காண்பாய். அப்பொழுது இம்மாதிரியான எண்ணங்கள் உன் மண்டைக்குள் புகவே புகாது. ம ற் ற வர்கள் சும்மா முணுமுணுத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக பணத்தை மிச்சப் படுத்துகிருர்கள் தொழிற் கூடங்களே சொக்தமாக வாங்கிக் கொள்கிருர்கள்.அப்புறம் சீமான்கள் மாதிரி வாழ்க்கை கடத்துகிருர்கள்.”