பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 59 எதிர்பாராத இக்கூற்றினால் திடுக்கிட்டவனாய் கிரிகரி முனங்கினன்: 'உம்ம். அது மாதிரி நேரங்களில் எங்கே எப்படித் தாக்க வேண்டும் என்று யாருக்குத் தெரிகிறது? நான் பிசாசு இல்லையே. நான் சும்மா வேடிக்கையாக அப்படிச் செய்யவில்லை. மிகுதியான துயரம் தான் என்னை அதற்குத் தூண்டி விடுகிறது.” "அது எங்கேயிருந்து வருகிறது-அதுதான். உன்னுடைய துயரம் தான்?" என்று மகிழ்ச்சி இல்லாதவளாய் மேட்ரோன் விசாரித்தாள். "அது என் விதி, மேட்ரோனு" என்று வேதாந்தம் பேசினான் கிரிகரி. "என் விதியும் என்னுடைய இயல்பும் தான். என்னைப் பார். மற்றவர்களை விட நான் மோசமானவனா? உதாரணமாக, அந்த உக்ரேனியாக்காரனே விட நான் என்ன மட்டமா? இருந்தாலும் துயரம் ஒரு பொழுதும் அவனை அணுகுவதில்லை. அவன் தன்னந்தனியாகத் தான் இருக்கிறான்-மனேவி இல்லை; யாருமே இல்லை. எனக்கு நீ கிடைக்காமலிருந்தால் நான் ன செத்துப் போயிருப்பேன். ஆனால் அவன் கவலைப்படுவதாகவே தோன்றவில்லே. சும்மா உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டு புன்னகை புரிந்தபடி, புகை பிடிப்பதற்கு ஒரு குழாய் இருக்கிறதே என்ற திருப்தியோடு, காணப்படுகிறான்.வலுத்த பயல் அவன். ஆனால் நான் அப்படி இல்லை. உள்ளத்தில் சஞ்சலத் தன்மையோடு தான் நான் பிறந்தேன். அது என் சுபாவம். நான் உருக்கினாலான வில் விசை மாதிரி. இலேசாகத் தொட்டாலும் போதும். அது துடிக்க ஆரம்பித்து விடும். உதாரணத்துக்குச் சொல் கிறேனே: நான் உலாவப் போகிறேன். இதையும் அதையும் இன்னும் எதை எல்லாமோ பார்க்கிறேன். எனக்கு என்று எதுவுமின்றி நான் இருப்பதை உணர்கிறேன். அது என்னை வெறியனாக்கி விடுகிறது. அந்த