பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ஆர்லோவ் தம்பதிகள் உக்ரேனியன் இருக்கிறானே, அவன் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. எதுவுமே இல்லாமல் அவன் வாழ முடிகிறது. அவன் தாடி நாசமாய்ப் போக! அவன் கூட என்னை வெறியன் ஆக்குகிறான். ஏனென்றால் அவன் எதுவும் இல்லாமலே வாழ முடிகிறது. ஆனால், எனக்கோ-நான் விரும்பாத பொருள் எதுவுமே இல்லை. ஆனாலும் நான், எனக்கென்று குறிப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லாமல், இங்கே இந்தப் பொந்தில் உட்கார்ந்து நாள் பூராவும் உழைத்துக் கொண்டேயிருக்கிறேன். அல்லது, உன்னேயே எடுத்துக் கொள்வோம். நீ என் மனைவி தான். இருந்தாலும் என்ன? நீயும் மற்ற எல்லோரையும் போல் சாதாரணமான ஒரு பெண்பிள்ளை. ஒரு பெண்ணுக்கு வேண்டிய சகல உடைமைகளையும் பெற்றவள். அவ்வளவு தானே! உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடிய அனைத்தையும் நான் அறிந்து கொண்டேன். நாளை நீ எப்படித் தும்முவாய் என்பது கூட எனக்குத் தெரியும், ஏனெனில், குறைந்த பட்சம் ஆயிரம் தடவைகள் நீ தும்மியதை நான் கேட்டிருக்கிறேன். ஆகையால் ஊக்கமும் உற்சாகமும் பெறுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு எழவுமே இல்லை. அதனாலே நான் மதுக் கடையைத் தேடிப் போகிறேன். ஏனென்றால் அங்கே மகிழ்ச்சியாவது கிடைக்கிறதே.” "கலியாணம் செய்து கொள்ளும்படி உன்னைத் தூண்டியது எது?” என்று மேட்ரோனா கேட்டாள். சிறு சிரிப்புச் சிதறினான் கிரிகரி. "சைத்தானுக்குத்தான் தெரியும். உண்மையைச் சொல்வதானல், நான் கலியாணம் செய்திருக்கவே கூடாதுதான். நான் ஒரு நாடோடியாக வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் நான் பட்டினியாக அலைய நேரினும்