பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64 ஆர்லோவ் தம்பதிகள் அடியில் உள்ள இந்த அறை பொங்து அல்ல. நமது வாழ்க்கையே அப்படி இருக்கிறது.' மேட்ரோனு ஒரு கணம் யோசனை செய்தாள். "கடவுள் கிருபை புரிந்தால், நம் கிலேமை இதை விட நல்ல தாக மாறி விடும்"என்று தனது பல்லவியை மறுபடியும் சொன்னுள். ‘. . "எல்லாம் சரிப்பட்டுப் போகும்-இதைத்தான் ே ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிருய், ஆளுல் காரியங்கள் எல்லாம் நல்லதாக மாறுவதற்குப் பதில் மோசமாய் போய்க் கொண்டிருப்பதாகத் தான் தோன்றுகிறது. நாம் முன்னே விட அதிகமாகவும் அடிக்கடியும் ச ண் ைட போடுகிருேம்.” - - அது உண்மை தான். வர வர அவர்களுடைய சண்டைகளுக்கு இடையே சமாதான காலம் குறுகிக் கொண்டே வந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் கிரிகரி காலேயில் துயில் நீங்கி எழும் போதே தன் மனைவி மீது பகைமை உணர்ச்சி உள்ளத்தில் கனிந்து திகழும் கிலேயில் தான் கண் விழித்தான். - இன்று ராத்திரி மூக்கு முட்டக் குடிப்பதற்காக நான் பால்டியின் மதுக் கடைக்குப் போவேன்' என்று அறிவிப்பான் அவன். மேட்ரோன தன் கண்களைச் சுருக்கிக் கொள்வாள். ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள். "என்ன, சொல்வதற்கு ஒன்றுமில்லையா? அதுதான் சரி. உனக்கு நல்லது எது என்று நீ தெரிந்து கொண்டால், உன் வாயை நீ மூடியே தான் வைத்திருப்பாய்."