பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ஆர்லோவ் தம்பதிகள் இருண்ட வீட்டின் வாசலில் வந்து நின்றது. ஆர்லோவ் குதித்தெழுந்தான். சென்ற சில தினங்களின் நிகழ்ச்சிகள் பற்றிய கினேவைத் தனது குழம்பிய மூளையில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு அவன் அதி தீவிர முயற்சி செய்தான். அவனுடைய ஒளியற்ற கண்கள் அந்த அதிதி மீது நிலைத்து விட்டன. மகா பயங்கரமான சம்பவங்களே எதிர்பார்த்துக் கலக்கமுற்றான் அவன். "இந்த வழியே, இந்த வழியே" என்று, வெளியே நின்ற யாரையோ அழைத்தான் அந்தப் போலீஸ்காரன். "பாதாளக் கிடங்கு மாதிரி இங்கே ஒரே இருட்டாக இருக்கிறதே. வியாபாரி பெடுன்னிக்காவை பிசாசு விழுங்கட்டும்" என்று இளமையும் உற்சாகமும் நிறைந்த குரல் உள்ளே வந்தது. மறுகணம் அறைக்குள் வந்து சேர்ந்தான் வெண்மையான கல்லூரி உடுப்பு அணிந்த மாணவன் ஒருவன். அவன் தன் குல்லாயைக் கையில் பற்றியிருந்தான். அவனுடைய தலை முடி ஒட்ட வெட்டி விடப்பட்டிருந்தது. உயர்ந்து தோன்றிய அவன் நெற்றி சூரிய ஒளியினால் காய்ந்து சிவந்திருந்தது. அவனது கபில நிறக் கண்கள் கண்ணாடிகளுக்குப் பின்னால் களிதுலங்க மின்னின. "வணக்கம்” என்று அழுத்தமான குரலில் சொன்னான் அவன். "என்னே நானே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் தான் சுகாதார அதிகாரி. நீங்கள் எப்படி வசிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க வந்திருக்கிறேன். நீங்கள் சுவாசிக்கிற காற்றை சுவாசித்துப் பார்க்கிறேன்-உண்மையிலேயே ரொம்ப மோசமான காற்று தான்.” ஆர்லோவ் புன்னகை புரிந்தான். நிம்மதி அடைந்து நெடு மூச்செறிந்தான் அவன். உடனடியாகவே அவனுக்கு