பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 69 அந்த மாணவனேப் பிடித்து விட்டது. கன்னங்க ளி ல் செம்மயிர் படிந்து, மோவாய் ரொம்பவும் சிவந்து, அவன் முகம் உருண்டு திரண்டு காணப் பட்டது. அவன் விசேஷமான உல்லாசம் கலந்த தனி வகையில் சிரித்தான். ஆர்லோவ் தம்பதிகள் வசித்த அடித்தள அறை கூட அக்தச் சிரிப்பினுல் அதிகப் பிரகாசமும் அதிகமான குதுர கலமும் பெற்று விட்டதாகத் தோன்றியது. அவன் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போளுன்: "எனது அருமை மக்களே, இனி மேல் நீங்கள் அடிக்கடி கழிவு குப்பைகளே வெளியே கொண்டு கொட்டி விட வேண்டும். குப்பைக் கழிவு தான் இந்த துர் காற்றத்தைப் பரப்புகிறது. வீட்டு அம்மா, நீ அடிக்கடி பாத்திரத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று சொல்ல விரும்பு கிறேன். ஐயா, நீ ஏன் உன் முகத்தை இப்படித் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிருய்? இதைச் சொல்லி விட்டு அவன் ஆர்லோவின் கையைப் பிடித்து ன்டி பார்த்தான். அந்த மாணவனின் கலகலப்பான சுபாவம் ஆர்லோவ் தம்பதிகளுக்கு சங்கோசம் உண்டாக்கியது. மேட்ரோனு குழப்ப கிலேயில் புன்னகை புரிந்து, எதுவும் பேசாமல் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். கிரிகரியின் சிரிப்பில் நம்பிக்கையின்மை கலந்திருந்தது. "உங்கள் வயிறெல்லாம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான் அம் மாணவன். "கூச்சப்பட வேண்டாம். நம் எல்லோருக்குமே வயிறு இருக்கிறது. உங்கள் வயிறு உங்களுக்கு ஏதாவது தொல்லே கொடுத்துக் கொண்டிருக் தால், அதுக்கு முடிவு கட்ட நாங்கள் பலவிதமான கசப்பு மருந்துகள் கொடுப்போம்.' கிரிகரி லேசாகச் சிரித்தபடி பதில் அளித்தான்; "நாங்கள் நன்முகத் தான் இருக்கிருேம், குறை கூறு