பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii

 உங்களுக்கும் எனக்கும், உண்மையாகவே நல்லவர்களான அநேகம் பேரைத் தெரியும். அவர்களை நல்லவராக்கியது எது? அவர்களுடைய சொந்த ஆசையைத் தவிர வேறு எதுவும் அல்ல. மனிதர்கள் தாம் இருக்கிற நிலையிலிருந்து இன்னும் உயர்ந்து திகழவே ஆசைப்படுகிறார்கள்." இப்படி கார்க்கி ஒரு கட்டுரையில் குறித்திருக்கிறார்.

மனிதரின் அந்த ஆசையைத் தாண்டி அவர்கள் உயர்நிலை பெறுவதற்குத் துணைபுரிவது தான் இலக்கியத்தின் நோக்கம் ஆக வேண்டும் என்பது கார்க்கியின் கொள்கை.

இத்தொகுதியில் உள்ள நெடுங்கதையில், கதாநாயனாக வருகிற ஆர்லோவ் உயர வேண்டும் என்று ஆசைப்பட்டான். உழைத்தான். சிறிது உயர்வு அடைந்தான். ஆயினும் அவன் உருப்படவில்லை. காரணம், அவனிடமே அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அதனால் அவன் தன் மனைவி மீதும் மற்றவர்கள் மீதும் அவநம்பிக்கை கொண்டு, அமைதி இழந்து, குடித்துக் கெட்டான். ஆர்லோவின் வாழ்வையும் அவன் உள்ளத் துடிப்புகளையும், அவன் மனைவியின் வேதனைகளையும் நன்கு சித்திரிக்கிறது அக்கதை.

வயது முதிர்ந்து விட்ட போதிலும் ஒரு கிழவனும் கிழவியும் யாரோ ஒரு சிறு பெண்ணிடம் கண்ட நல்ல பண்புகளை மறக்க முடியாமல் போற்றி, அரிய பெரிய சாதனை ஒன்றில் ஈடுபட்டு விட்ட பெருமையை ‘சின்னஞ் சிறு பெண்’ என்ற கதை கூறுகிறது.

'இரண்டு குழந்தைகள்’ என்ற சுவாரஸ்யமான கதை குழந்தைப் பண்புகளை மட்டுமே சித்திரிக்கவில்லை. வேறு சில பெரிய விஷயங்களையும் சுட்டிக் காட்டுகிறது.

மனிதர்களைப் பற்றி எழுதிய கார்க்கி இயற்கையின் தன்மைகளையும் அழகுகளையும் கவிதை நயத்தோடு தம் கதைகளில் வர்ணித்-