பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 79 கதவில் உள்ள இடுக்கு வழியாக நோயாளியைப் பார்த்து விட அவன் முயற்சி செய்தான்.

"கிரிகரி மாமா, அவன் குடிப்பதற்குத் தண்ணிர் கொடுக்கலாமா?" என்று சென்கா கேட்டான்.

அச்சிறுவனின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான் கிரிகரி. அம் முகம் பூராவும் உணர்ச்சிப் பரபரப்பினால் துடித்துக் கொண்டிருந்தது. கிரிகரியும் குழப்பத் துடிப்பு பெற்றிருந்தான். "சரி. கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா" என்று உத்திரவிட்டான் அவன். பிறகு, துணிந்து கதவை விரியத்திறந்து போட்டு விட்டு வாசல்படி மீது நின்றான், அவன் உடல் தானாகவே பின்னுக்கடித்தது. கிஸ்லியகோவின் உருவம் அவன் பார்வையில் மங்கலாகப்பட்டது. வாத்தியக்காரன், தனது உயர்ந்த உடுப்புகளை அணிந்து கொண்டு, மேஜை மீது மார்பை அழுத்தியபடி, அயர்ந்து கிடந்தான். அவன் கைகள் மேஜையை அழுத்தமாகப் பற்றியிருந்தன. உயர்ந்த தோல் பூட்ஸ் அணிந்திருந்த அவன் பாதங்கள், ஈரத்தரையில், குறிப் பற்று அசைந்து ஊர்ந்தன. "யார் அது?" என்று அவன் கம்மிய குரலில் உணர்ச்சியற்ற முறையில் கேட்டான். கிரிகரி தனது தோள்களை உயர்த்திக்கொண்டு, தரையில் எச்சரிக்கையோடு அடி எடுத்து வைத்து, அவன் அருகே சென்றான். உற்சாகத்தோடு, வேடிக்கையாய் கூட, பேச முயற்சித்தான் அவன். "நான் தான், டிமிட்ரி பாவ்லோவிச். இதென்ன விஷ யம்? நேற்று ராத்திரி உனக்கு உள்ளே தங்கியிருக்கக் கூடிய அளவுக்கும் அதிகமாகக் குடித்துவிட்டாயாக்கும்?”