பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80- ஆர்லோவ் தம்பதிகள் என்றான். அவன் கிஸ்லியகோவைக் கடுமையாக உற்று நோக்கினான்.பயமும் வியப்பும் அவனை ஆட்டிப்படைத்தன. நோயாளி இனம் தெரியாதபடி மாறிப்போனதை அவன் உணர்ந்தான். வாத்தியக்காரனின் முகம் வறண்டு போயிருந்தது. கன்னத்து எலும்புகள் துருத்திக்கொண்டுகின்றன. குழி விழுந்திருந்த கண்களைச் சுற்றிலும் பச்சை நிறப் புள்ளிகள் படர்ந்து கிடந்தன. பார்வை விசித்திரமான மந்த நிலயோடு, ஒரே திக்கில் வெறித்து நிற்கும் தன்மை பெற்று விட்டது. கன்னங்களின் மீதுள்ள சருமம்,உஷ்ணம் மிகுந்த கோடைக்கால நாளில் காட்சி அளிக்கும் சவத்தின் நிறத்தை பெற்றிருந்தது. பயங்கரமாகவும் மரணக்களையோடும் விளங்கியது அவன் முகம். அவனுடைய தாடைகளின் மெல்லிய அசைவு தான் அவன் உயிரோடு இருக்கிறான் என்பதை நிரூபித்தது. அவனது மந்த நோக்கு நெடுநேரம் கிரிகரியின் மீதே நிலைகுத்தி நின்றது. இது அந்தச் செம்மானை பயத்தில் ஆழ்த்தி விட்டது. சீக்காளியை விட்டுச் சில அடி தூரம் விலகி நின்று கொண்டிருந்த அவன் ஏனோ தன் கால் சட்டையின் விளிம்புத் தையல்களை இழுத்துப் பறிப்பதில் முனைத்து விட்டான். யாரோ ஒருவன் குளிர்ந்த ஈரக்கசிவு உள்ள கரம் கொண்டு தனது தொண்டையை அழுந்தப் பற்றிச் சிறிது சிறிதாக இறுக்கி அமுக்குவது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. முன்பு ஒளியும் வசதியும் நிறைந்ததாக விளங்கிய- ஆனால் இப்போது விபரீதமான குளிர்ச்சியும் அழிவின் நாற்றமும் நிறைந்து காணப்பட்ட -அந்த அறையை விட்டு வெளியே பாய்ந்து ஒடிப்போக அவன் விரும்பினான். திரும்பிச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டே அவன், "நல்லது..." என்று ஆரம்பித்தான். வாத்தியக்காரனின் சாம்பல் நிற முகத்தின் மேலே ஒரு நிழல் பரவி மறைந்தது.