பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 - ஆர்லேன் தம்பதிகள் கிரிகரி ஒரு கிளாஸ் நிறையத் தண்ணிர் மொண்டு, ஒரே விழுங்கில் குடித்துத் தீர்த்தான் உயிரற்ற அவ்வார்த்தைகள் இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தன: "நான்...செத்துக்...கொண்டிருகிறேன்." ஆனால் ஸென்கா, இதுவரை இல்லாத வகையில், துருதுருத்துக் கொண்டிருந்தான். வர்த்தியக்காரன், மேஜை ஒரமாக அவர்களை நோக்கி நகர்ந்துகொண்டே , "தண்ணிர்" என்று முனங்கினான். ஸென்கா துள்ளி எழுந்து, ஒரு கிளாஸ் தண்ணிரை அவனது நிறமிழந்த உதடுகள் அருகே பிடித்தான். வாசல் அருகே சுவர் மீது சாய்ந்துகின்ற கிரிகரி, ஏதோ கனவில் கேட்பதைப்போல், சீக்காளி தண்ணிரை உறிஞ்சிக் குடிக்கும் ஒசையைக் கேட்டான். அதன் பிறகு தாம் இருவரும் சேர்ந்து அவன் ஆடைகளைக் களைந்து விட்டு அவனைப் படுக்க வைக்கலாமே என்று ஸென்கா யோசனை கூறியதையும் அவன் கேட்டான். அப்புறம், வர்ணம் பூசுவோர் வீட்டுச் சமையல்காரியின் குரல் வந்தது. அவளது அகன்ற முகம், பயமும் இரக்கமும் தாங்கி, ஜன்னல் கண்ணாடியோடு அழுத்தப்பட்டுக் காட்சி தந்தது. அழுகைக் குரலில் அவள் சொன்னாள்: "புகைக் கரியை சாராயத்திலே கலக்கி அவனுக்குக் கொஞ்சம் கொடுங்கள். ஒரு கிளாஸ் சாராயத்துக்கு இரண்டு கரண்டிப் புகைக்கரி." மர எண்ணெய், ஊற வைத்த உப்பு, உயர்ந்த ரக வோட்கா மது ஆகியவற்றைக் கலந்து கொடுக்கலாம் என்று முற்றத்தில் நின்ற வேறொருவன் சொன்னான்.