பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் ಟಿಕ್ಗೆ. "அதுவும் அப்படியா? நல்லது. சரி. அப்பேர்......" அந்த மாணவன் அங்கே தரையில் கிடந்த பீப்பாய் ஒன்றின் மீது அமர்ந்து முன்னுக்கும் பின்னுக்குமாக ஆடி அசைந்து கொண்டே, தங்களைத் தாங்களே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி கிரிகரிக்கும் சென்காவுக்கும் விளக்கமாகச் சொன்னன். மேட்ரோனு, தன் முகத்தில் ஆவல் கலந்த புன்னகை மிளிர, அங்கே வந்தாள். அவளுக்குப் பின்னல், சமையல்' காரி எண்ணெய்ப் பிசுக்கு மிகுந்த தன் முக்தாணேயில் முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்து சேர்ந்தாள். சிறிது நேரத்திற்குள்ளாக, மற்றும் சிலர், குருவி ஒன்றைப் பிடிக்கச் செல்கிற பூனே மாதிரி, கள்ள நடை கடந்து வந்தார்கள். முடிவில் சுமார் பத்துப்பேர் அம் மாணவன்ச் சுற்றி இடித்து நெருக்கிக் கொண்டு கின்ருர்கள். அது அவன் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அவன் அவர் களுக்கு மத்தியில் நின்று, பலமாகக் கையை ஆட்டி அசைத்து ஒரு பிரசங்கமே பண்ணத் தொடங்கிவிட்டான். அது, கேட்டு கின்றவர்களின் முகங்களில் ஒரு புன்னகையை வரவழைத்தது; பிறகு ஒளிவுமறைவற்ற அவநம்பிக்கையை அல்லது கேலி செய்யும் சந்தேக சுபாவத்தை உண்டாக் கியது. "எல்லா விதமான வியாதிகளையும் எதிர்க்கக் கூடிய மகா முக்கியமான சாதனம் சுத்தமே ஆகும் - உடல் சுத்தமும், நீங்கள் சுவாசிக்கிற காற்றின் சுத்தமும் தான்" என்று அவன் சொன்னன். "அட கடவுளே!” என்று முனங்கினுள் வர்ணம் பூசுவோர் விட்டுச் சமையல்காரி,"உங்களே அகால மரணத் திலிருந்து நிச்சயமாகப் பாதுகாக்கக் கூடிய ஒரே விஷயம்,