பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 109 'கா மா சோமா விளையாட்டா? கட்டை மட்டை வெறியாட்டா? பூமா - பாமா பூப்பந்தா? பொத்தல் கூடை ராக்கெட்டா? ஏமாந் தீரோ இவைஎண்ணி! எதுவும் அன்று இவைகளிலே! ஆமாம்! "சடுகுடு" ஆட்டந்தான்! அதுவே நமது விளையாட்டு! சடுகுடு ஆட்டம் ஒன்றேதான் தமிழர் ஆண்மை காட்டுவதாம்! கெடுதலை இல்லை அதனாலே! கிடைத்திடும் நன்மைகள் புதிதாக! ஆட ஆட வலுவேறும்! அங்கம் தோறும் பொலிவேறும்! தேடக் கிடைக்கா வெற்றியெலாம் திண்ணம் சடுகுடால் பெற்றிடலாம்! அணியாய் அணியாய்த் திரளுங்கள்! ஆடிக் களிப்பில் புரளுங்கள்! பணியாய் அதனைப் பேணுங்கள்! பண்டைப் புகழைப் பூணுங்கள்! •+ -ī- -ī- .