பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 19 திருவிழா! எங்கள் ஊரில் திருவிழா! ஏழு நாட்கள் பெருவிழா! தங்க மாரி அம்மனின் தரிச னத்தால் மகிழுவோம்! தாள மேள நாயனம், தப்பு தாரை ஒலிக்கவே, நாளும் நாளும் வைபவம் நடக்கும் காட்சி அருமையாம்! இரவில் அம்மன் ஊர்வலம்! இல்லம் தோறும் அர்ச்சனை! சரசர வாண வேட்டுகள்! சதங்கை குலுங்கும் ஆட்டங்கள்! கடைசி நாளில் தீமிதி! காவடி நடனக் கோலங்கள்! கடைகள் வரிசை எத்தனை! காணக் காண வேடிக்கை! பக்தர் கூட்டம் எங்குமே பரவசம் ததும்பிப் பொங்குமே! சக்தித் தாயை வணங்கினால் சகல வரமும் கிட்டுமே! مگاه مگه م؟ اء ميه ميه