பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 117 பிள்ளையாரைப் பாருங்கள்! பிள்ளைகள் யாவரும். வாருங்கள்! பிள்ளை யாரைப் பாருங்கள்! சள்ளைகள்; கவலைகள் ஓடிவரும்! சாந்தியும் இன்பமும் கூடி விடும்! வெல்ல மோதகம் படையுங்கள்! வேண்டித் தேங்காய் உடையுங்கள்! நல்ல வரங்கள் யாசித்தே நாளும் தவறாமல் பூசிப்பீர்! ஆடி வெள்ளித் தைவெள்ளி ஆவணி சதுர்த்தி நாட்களிலே கூடி விநாயகரை நாம் தொழுதால் கோடி நன்மைகள் தேடிவரும்! பிள்ளை யாரைப் பார்த்திட்டால் பெரிய உண்மை புலனாகும்! பள்ளிக்கூடம் சொல்ல்ாத பாடங்கள் விநாயகர் சொல்லிடுவார்! தொந்திக் கணபதியைத் தொழும்போது தோப்புக் கரணங்கள் போடுகிறோம்! அந்தி சந்தி வேளைகளில் அப்படித் தொழுதல் எதற்காக?