பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 / வயலூர் சண்முகம் மனமும், நினைப்பும் ஒன்றாகி வளைத்துக் குந்தி எழுந்திட்டே தினமும் "தோப்புக் கரணங்கள்" செய்வது சிறந்த உடற்பயிற்சி! பிள்ளை யாரின் நாமங்கள் பேசும் அர்த்தம் பலவாகும்! உள்ளம் மகிழும் வாழ்வுபெற ஒவ்வொரு பெயரும் மந்திரந்'தான்! கடவுள் களுக்கே அவர் தலைவர்! "கணபதி” என்பதும் அதனால்தான்! இடர்கள் களைவதால் "விக்கினத்தின் ஈஸ்வரன்" என்றும் பெயர் பெற்றார்: ஆனை முகத்தை உடையவனாய்; ஐந்து கைகள் பெற்றவனாய், பானை வயிறும் உடையவனாய் பகவான் விநாயகர் விளங்குவதேன்? காட்டு விலங்குகளில் யானைதான் கள்ள ஆசையால் கெட்டழியும்! வீட்டு மக்கள் யாருக்கும் - 'விபரீத ஆசைகள் கூடாதாம்!