பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 119 ஆனை போலத் தின்றிட்டால் அழகு கெட்டே உடல்பெருக்கும்! பானை வயிறும் உண்டாகும்! பார்ப்பவர் நகைக்கவே இடமாகும்! எண்ணும் கருத்தில் மிருகம்போல் இச்சை கொள்ளுதல் தீதன்றோ? உண்ணும் சோறும் உண்டிகளும் ஒழுங்காய் இருத்தல் நலமன்றோ? தருமம் என்பதும் ஐந்தாகும்! சாஸ்வத அறங்களும் அவையாகும்! விரும்பித் தருமம் செய்வோர்கள் விளக்கம் அவற்றால் பெறலாகும்! ஒருசாண் வயிற்றுப் பசியேதான் உலக வாழ்வில் முதல் துன்பம்! வருவோர்; வறியோர் பசியகற்றல் வள்ளல் அனைவருக்கும் முதற்கடமை! நோயும், பிணியும் கொண்டவர்க்கே நூறு வழிகளில் உதவிடுதல் தாயைப் போலப் பேணிவரல் தருமப் பிரபுவின் மறுகடமை!