பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 117 அழகே புதுமை! சித்திரம் வரைவாய்! சித்திரம் வரைவாய்! சின்னத்தம்பி! பத்திரம் பதமாய் பாங்காய் இருந்தே படத்தை வரைவாய்! ... • சிங்கம் போலவும், சிறுத்தை போலவும், சங்கைப் போலவும், சாமி போலவும், எங்கும் காணும் இயற்கை அழகை எடுத்தே எழுதி இனிதே வரைவாய்! பூனை போலவும் பூவைப் போலவும், பானை போலவும் பாலம் போலவும், ஆனை போலவும், அன்னம் போலவும், அழகாய் வரைவாய் அருமைத் தம்பி! அழகை எழுதிப் பழகு அழகை அள்ளிப் பருகு! பழகப் பழக இனிமை! பாரில் அழகே புதுமை! + + +