பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு / 19 வெள்ளிக்கிழமை! வெள்ளிக் கிழமை மாலை! விளக்கு வைக்கும் நேரம்! பிள்ளைகள் எல்லாம் கூடுவோம்! பிரார்த்தனைப் பாடல் பாடுவோம்! அம்பாள் கிருபை வேண்டியே, "அருள்வாய்!” எனவே வேண்டுவோம்! நம்பும் பக்தி தன்னால் நலமே பெறுவோம் திண்ணம்! கல்வி கேட்போம் தாயை! கருணை கேட்போம் தாயை! பல்விதமான வெற்றிகள் பலிக்கச் செய்வாள் தேவி! திருமகள் தன்னைப் பணிவோம்! செல்வச் சுகங்கள் பெறுவோம்! ஒருமன தாகத் துதித்தால் உலக வாழ்வே இன்பம்! •+ + -ī