பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 121 அதிசயக் கோழி! பாலு மாமா வாங்கி வந்தப் பட்டணத்துக் கோழி! - அது பச்சை நிறம் பளபளக்கும் பாங்கான கோழி! காலும் தலையும் ஆட்டி ஆட்டிக் கண்ணைப் பறிக்கும் கோழி! - அது காட்டுநரி வந்தாலும் பறந்து ஓடும் கோழி! அட்டைப் பெட்டிக் கூண்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் கோழி! - அது ஆகாரம் தின்னாத அதிசயத்துக் கோழி! முட்டை மூன்று இட்டு விட்டு மூக்க சைக்கும் கோழி! - அது முன்னும் பின்னும் நடை நடக்கும் விந்தையான . . கோழி! ക്രിബ്ഫേ@. கூரை ஏறிக் கூவிடாத கோழி! - அது குஞ்செதுவும் பொறித்திடாத சன்யாசிக் கோழி! துப்பு கெட்டு வேலி தாண்டித் துள்ளிடாத கோழி: - அது சுதந்திரமாய் வாழுகின்ற உல்லாசக் கோழி: •:- - - - -